
தமிழகத்தில் சாலை விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றினால் ரூ.2,00,000 பரிசு?? அமைச்சர் மா.சுப்பிரமணியன்!!
இந்தியாவில் தினமும் சாலை விபத்தால் ஏகப்பட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது. அதாவது ஒரு மணி நேரத்தில் 47 விபத்துகள் நடைபெற்று அதில் 18 பேர் உயிரிழப்பதாகவும், ஒரு நாளைக்கு 1130 விபத்துகள் ஏற்பட்டு 422 பேர் உயிரிழப்பதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உயிரிழப்பை குறைக்க அரசு சாலை தரத்தை உயர்த்துதல், வாகனங்களை தணிக்கை செய்தல், சாலை விதிகளை கடுமையாக்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தமிழகத்தில் மின்கட்டணம் செலுத்த புதிய நிபந்தனை.. மின்வாரியத்தின் அதிரடி அறிவிப்பு!!
தற்போது சாலை விபத்து தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முக்கிய கருத்தை கூறியுள்ளார். அதில், விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கும் நபர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை ஒரு லட்சம் ரூபாயிலிருந்து இரண்டு லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

























