RRB NTPC தேர்வர்களின் கவனத்திற்கு – தேர்வு எப்போது || முழு விவரங்களுடன்!
RRB ஆனது பல்வேறு துறைக்கு பல பிரிவின் கீழ் தகுதியான நபர்களை தேர்வு செய்து பணியமர்த்தி வருகிறது. சமீபத்தில் NTPC Graduate and Undergraduate பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதில் Graduate பணிக்கு 8,113 பணியிடங்கள் மற்றும் Undergraduate பணிக்கு 3,445 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏராளமானோர் விண்ணப்பித்திருக்கும் நிலையில் இப்பணிக்கான தேர்வானது எப்போது நடைபெறும் என விண்ணப்பதாரர்கள் காத்துக்கொண்டு இருக்கின்றனர். மேலும், தோராயமாக இத்தேர்வானது மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் Computer-Based Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இத்தேர்வுக்கான அட்டவணையானது விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வு தேதி வெளியானதும் Admit Card வெளியாகும். இது குறித்த தகவல் தெரிந்துகொள்ள எங்கள் பக்கத்தில் இணைந்திருங்கள்.


























