RRB ALP தேர்வர்களின் கவனத்திற்கு – Admit Card வெளியீடு!
Railway Recruitment Board எனப்படும் RRB ஆனது Assistant Loco Pilot பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இப்பணிக்கென மொத்தம் 18799 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. விண்ணப்பதாரர்கள் Computer Based Test (CBT 2) தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இத்தேர்வானது 19.03.2025 மற்றும் 20.03.2025 தேதி வரை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது RRB ALP தேர்வு எழுதுபவர்களுக்கான Admit Card வெளியாகியுள்ளது.
இதை RRB அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. Assistant Loco Pilot தேர்வு எழுதுவதற்கு Admit Card கட்டாயமானதாகும். இத்தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி Admit Card-ஐ டவுன்லோட் செய்துகொள்ளலாம்.
Download செய்யும் முறை:
- விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்திற்கு செல்லவும்.
- பின் Click here to Download Online CBT 2 Admit Card for RRB ALP என்பதை கிளிக் செய்யவும்.
- அது புதிய login page-க்கு அழைத்து செல்லும்.
- விண்ணப்பதாரர்கள் அதில் கேட்கப்படும் registration number or roll number மற்றும் birth / password பூர்த்தி செய்து Admit Card பெற்றுக்கொள்ளலாம்.
- பின் Download என்பதை கிளிக் செய்து Download செய்துகொள்ளவும்.



























