IPL 2025: RCB அணிக்கு மாறுகிறாரா பண்ட்?? வெளியான முக்கிய அப்டேட்!!
இந்தியன் பிரீமியர் லீக் 2025 தொடர் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது. அதன்படி, அடுத்த ஆண்டிற்கான மெகா ஏலம் பெங்களூரில் நடைபெற இருப்பதாக தகவல்கள் உலா வந்தது. ஆனால் தற்போது வெளியான தகவல் படி, IPL தொடருக்கான மெகா ஏலம் வரும் நவம்பர் 16 மற்றும் 17 தேதிகளில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த ஜிம்பாப்வே அணி.. வெளியான முக்கிய தகவல்!!
இது ஒரு பக்கம் இருந்தாலும், IPL அணி வீரர்களில் யார் யாரை தக்க வைப்பது என நிர்வாகங்கள் ஆலோசித்து வருகின்றன. இதுகுறித்து விரைவில் அந்நிர்வாகங்கள் முடிவெடுக்கலாம் எனக் கூறப்படுகிறது. அப்போது டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து பண்ட் நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும், அதுபோல் அவர் நீக்கப்பட்டால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு அவர் மாறக்கூடும் எனவும் சொல்லப்படுகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
























