மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது & ஓய்வூதியம் உயர்வு – முக்கிய ஆலோசனை!

2
மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது & ஓய்வூதியம் உயர்வு - முக்கிய ஆலோசனை!
மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது & ஓய்வூதியம் உயர்வு - முக்கிய ஆலோசனை!
மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது & ஓய்வூதியம் உயர்வு – முக்கிய ஆலோசனை!

இந்தியாவில் மத்திய அரசு தனது ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது மற்றும் ஓய்வூதியத் திட்டத்தை உயர்த்துவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. இது குறித்து பொருளாதார ஆலோசனை குழு பிரதமருக்கு பரிந்துரைகளை வழங்கியுள்ளது.

ஓய்வூதியத்தொகை:

இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் அதிகரித்து வரும் விலைவாசிக்கு ஏற்ப அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் வருடந்தோறும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இந்த அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா பரவல் குறைந்த பிறகு கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் அகவிலைப்படி 11% உயர்த்தப்பட்டு மொத்தம் 28% ஆக அதிகரிக்கப்பட்டது. அதன் பிறகு மீண்டும் 3% அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டு தற்போது 31% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 8ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – NMMS தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு!

அதனை தொடர்ந்து 2022ம் ஆண்டு மேலும் 3% உயர்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அகவிலைப்படியை தொடர்ந்து 7 – வது ஊதிய குழுவின் பரிந்துரையின் படி ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் ஓய்வூதியத் தொகையை உயர்த்த வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தது. இதனையடுத்து தற்போது ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை உயர்த்துவது ஓய்வூதியத் தொகையை உயர்த்துவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு – மாணவர்கள் உற்சாகம்!

மேலும் இது குறித்து பிரதமர் மோடி அவர்களுக்கு பொருளாதார ஆலோசனை குழு பரிந்துரைகளை வழங்கியுள்ளது. பணியில் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டுமானால் ஓய்வு பெறும் வயதை உயர்த்த வேண்டிய கட்டாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சுமார் 32 கோடி மூத்த குடிமக்கள் உள்ளனர். இவர்களுக்கு உதவும் வகையில் ஓய்வு பெறும் வயதையும், பென்சன் தொகையையும் உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

  1. நடுவண் அரசின் ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை உயர்த்த ஆலோசிப்பதாகவும் , நடுவண் அரசின் ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்திவழங்க பரிசீலிப்பதாகவும் செய்திகள் வருகிறது…

    நீண்ட காலமாக வருங்கால வைப்பு நிதியை முதலீடு செய்து அதில் இருந்து மிக மிக சொற்ப தொகையை அதாவது 1000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருவதை நிவர்த்தி செய்யும் பொருட்டு வறுமையில் உள்ள மூத்த குடிமக்கள் நலனில் கவனம் செலுத்த கோரும் கோரிக்கைகள் PGPORTAL மூலம் அனுப்பியும் நிராகரிக்கப்பட்டு வருகிறது…

    நம் நாட்டில் தொழில் வளர்ச்சி பெற்று அந்நிய செலாவணி கையிருப்பு மிகுதியாக இருக்கும் நிலையில் இந்திய பொருளாதாரம் தலை நிமிர்ந்து நிற்கும் நிலைக்கு வித்த்ட்ட தொழிலாளர்கள் இந்த கொடிய நோய் தொற்று காலத்தில் வாழ்வா சாவா என்ற அவல நிலையில் உள்ளனர் .அவர்களுக்கு குறைந்த பட்ச ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கி சமூக நீதியையும் நிலை நாட்ட வேண்டும் என்று விரும்புகிறேன் .வேண்டுகிறேன் ..

  2. EPF Pension for ExGratia pensioners are so trouble to live please increase the pension amount. Epf pension amount is very small please increase Epf pension min 3500 rs per month.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!