தமிழகத்தில் 8ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – NMMS தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு!

0
தமிழகத்தில் 8ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - NMMS தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் 8ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - NMMS தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் 8ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – NMMS தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் உயர்கல்வி உதவித்தொகை பெற என்.எம்.எம்.எஸ் தேர்வுகள் நாளை நடைபெற இருப்பதால் முக்கிய குறிப்புகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

என்.எம்.எம்.எஸ் தேர்வுகள்:

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் பள்ளி வழக்கம் போல தொடங்கி செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த வருடம் முக்கியமாக பொது தேர்வுகள் நடக்கும் என்று தமிழ் நாடு பள்ளி கல்வி துறை முடிவு செய்து அதற்கான பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக மாணவர்களை தேர்வுக்கு தயார் படுத்த சமீபத்தில் திருப்புதல் தேர்வுகள் நடந்து முடிந்தது. மாணவர்களும் பொது தேர்வை எதிர்பார்த்து ஆய்தம் ஆகி வருகின்றனர். இந்த நிலையில் பொது தேர்வுக்கான தேதிகளை சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஆவின் பொருட்களின் விலை அதிரடி உயர்வு – பொதுமக்கள் அதிர்ச்சி!

இந்த நிலையில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு என்.எம்.எம்.எஸ் தேர்வுகள் நாளை நடக்க உள்ளது. இதன் ஹால் டிக்கெட் பிப் 25 ஆம் தேதி வெளியாகியது. இந்த தேர்வு ஆண்டுதோறும் பள்ளிகளில் நடைபெறு வருகிறது. இது எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அளிக்கப்படும் உயர்கல்வி தொகைக்கான தேர்வுகள் ஆகும். ஆர்வமுள்ள மாணவர்கள் இந்த தேர்வில் பங்கு பெற்று உதவித்தொகையை பெற்று கொள்ளலாம் என்று தமிழ் நாடு பள்ளி கல்வி துறை சார்பாக கூறப்பட்டுள்ளது.

தற்போது இந்த தேர்வுக்கான முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்புகள் என்னவென்றால், நாளை நடக்க இருக்கும் தேர்வு காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது. ஆனால் தேர்வில் பங்கு பெற உள்ள மாணவர்கள் தேர்வுக்கு 9 மணிக்கு தேர்வு நடைபெறும் இடத்தில் இருக்க வேண்டும். இந்த தேர்வுகள் இரு பிரிவுகளாக நடக்க உள்ளன. இதன் ஒரு பகுதி காலை 9.30 மணி முதல் 11.00 வரையும், அதன் பின்னர் 11 மணி முதல் 11.30 வரை இடைவெளி எனவும், அதனை தொடர்ந்து இரண்டாம் பகுதி 11.30 முதல் 1 மணி வரை நடைபெற உள்ளது. இது தவிர, வினாக்கள் குறித்தும் கூறப்பட்டுள்ளது. OMR sheet விடைகளை நிழலிட கருப்பு நிற பந்து முனை பேனா மற்றும் வினாத்தாளில் விடைக்குறிப்பு எழுதிப்பார்க்க பென்சில் எடுத்துள்ள வேண்டும்.

தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி பெற்றவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அமைச்சர் முக்கிய பேட்டி!

கட்டாயமான முறையில் அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்க வேண்டும் அதுவும் மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட நேரத்தில் பதிலளிக்க வேண்டும். SAT கணக்கு பாடத்திற்கு விடையளிக்க வினாத்தாளில் உள்ள எல்லா வினாக்களுக்கும் அருகிலேயே குறிப்புகளை எழுதி பார்த்து கொள்ளலாம்.MAT தலைப்பில் எண் தொடர் வரிசை, எண், எழுத்து குறியிடல், வென் படங்கள், செருகப்பட்ட படங்கள், இருக்கை அமைப்பு கணக்குகள், ஒப்புமை எண்கள், எழுத்துக்கள், படங்கள், தவறான வார்த்தை, ஆங்கில அகர வரிசைப்படி வரிசைப்படுத்துதல், Non verbal reasoning ஆகிய 7 தலைப்புகள் இடம்பெற உள்ளது. தேர்வில் பங்குபெற்றும் மாணவர்கள் அதை பார்த்து பயன் பெற்று கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!