Reliance Jio தினமும் 1.5GB டேட்டாவுடன் கூடிய ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டங்கள் – முழு விபரங்கள் இதோ!
இந்தியாவில் முன்னணி நிறுவனமான ஜியோ பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளர்களை தன்வசம் கொண்டுள்ளது. இதனை தொடர்ந்து இதில் தினமும் 1.5GB டேட்டா மற்றும் அன்லிமிடெட் காலிங், தினமும் 100 SMS உள்ளிட்டவை கிடைக்கும் திட்டத்தை பற்றி விரிவாக பார்ப்போம்.
ப்ரீபெய்ட் திட்டங்கள்
இந்தியாவில் ஏர்டெல், வோடபோன், ஜியோ உள்ளிட்ட முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பொதுமக்களுக்கு சிறந்த தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கி வருகிறது. மேலும் கொரோனா கால கட்டத்தில் பொதுமக்கள் அதிகளவு டேட்டாவை உபயோகப்படுத்தி வந்தனர். அத்துடன் தினமும் வழங்கப்படும் குறிப்பிட்ட அளவு டேட்டாவின் அளவை தாண்டியும் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக கடந்த ஆண்டு ப்ரீபெய்ட் திட்டத்தில் விலை உயர்வை அமல்படுத்தின.
அரியலூர் மாவட்டத்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை – அரசு அறிவிப்பு!
மேலும் கொரோனா கால கட்டம் என்பதால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வும் ஏற்பட்டது. அதனால் பொதுமக்கள் இந்த விலை உயர்வால் மிகவும் அதிருப்தி அடைந்தனர். இந்த நிலையில் குறைந்த விலையில் அதிக பலன்களை கிடைக்கும் வகையில் பல ப்ரீபெய்டு திட்டங்களை ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் தற்போது தினமும் 1.5GB டேட்டா மற்றும் அன்லிமிடெட் காலிங், தினமும் 100 SMS உள்ளிட்டவை குறைந்த் விலையில் கிடைக்கும் ப்ரீபெய்டு திட்டங்களின் விவரங்களை பற்றி விரிவாக பார்ப்போம். முதலாவதாக ஜியோவின் ரூ.119 திட்டத்தில் 1.5 ஜிபி டேட்டாவை 14 நாட்களுக்கு பெற முடியும். அதன்படி இத்திட்டத்தில் மொத்தமாக 21 ஜிபி வரை வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் முகக்கவசம் கட்டாயம் – கொரோனா தொற்றை தடுக்க அரசு அதிரடி உத்தரவு!
இதில் மொத்தமாக 300 SMS மற்றும் அனைத்து நெட்வொர்க்குகளிலும் அன்லிமிடெட் காலிங் உள்ளிட்டவை கிடைக்கிறது. அடுத்ததாக ஜியோவின் ரூ.199 திட்டம் 23 நாட்கள் வரை செலுப்படியாகிறது. இதில் தினமும் 1.5 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ், அனைத்து நெட்வொர்க்குகளிலும் அன்லிமிடெட் காலிங் ஜியோ பயன்பாடுகளுக்கான அணுகல் உள்ளிட்ட பலன்களை பெற முடியும். இதையடுத்து ஜியோவின் அடுத்த திட்டமான ரூ.239 திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. இதிலும் தினமும் 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் காலிங் மற்றும் 100 SMS உள்ளிட்டவை கிடைக்கிறது. மேலும் ஜியோ ரூ.479 மற்றும் ரூ.666 ஆகிய திட்டத்திலும் தினமும் 1.5 ஜிபி டேட்டாவை பெற முடியும்.