Jio, VI, Airtel ரூ.200க்குள் ரீசார்ஜ் செய்ய நினைப்பவர்கள் கவனத்திற்கு – முழு விபரங்கள் இதோ!

0
Jio, VI, Airtel ரூ.200க்குள் ரீசார்ஜ் செய்ய நினைப்பவர்கள் கவனத்திற்கு - முழு விபரங்கள் இதோ!
Jio, VI, Airtel ரூ.200க்குள் ரீசார்ஜ் செய்ய நினைப்பவர்கள் கவனத்திற்கு - முழு விபரங்கள் இதோ!
Jio, VI, Airtel ரூ.200க்குள் ரீசார்ஜ் செய்ய நினைப்பவர்கள் கவனத்திற்கு – முழு விபரங்கள் இதோ!

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா போன்ற தொலைதொடர்பு நிறுவனங்கள் ப்ரீபெய்ட் பிளான்களின் விலையை 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. புதிய ப்ரீபெய்ட் பிளான்களின் படி ரூ.200க்கும் குறைவான பிளான்களை பற்றி காண்போம்.

ரூ.200க்கும் குறைவான ப்ரீபெய்ட் பிளான்கள்

இந்தியாவில் இயங்கி வரும் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனம் தனது ப்ரீபெய்ட் பிளான்களின் விலை அதிகரிப்பை வெளியிட்டது. அத்துடன் 20% விலை அதிகரிப்பை அறிவித்துள்ளது. அதனால் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் குறைந்த விலை கொண்ட ப்ரீபெய்ட் பிளான்களை வாடிக்கையாளர்கள் அதிக அளவு பயன்படுத்தி வருகின்றனர். இதில் ரூ.200-க்கு குறைவான ப்ரீபெய்ட் பிளான்களை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளுவோம்.

ரிலையன்ஸ் ஜியோவின் பிளான்கள்:

முதலாவதாக ரூ.119 ப்ரீபெய்ட் பிளானில் தினசரி 1.5GB டேட்டா மற்றும் 100 SMS வழங்கப்படுகிறது. இதற்கான வேலிடிட்டி 14 நாட்கள் ஆகும். அத்துடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால் போன்ற பலன்களையும் பெற முடியும்.

அடுத்ததாக ரூ.149 ப்ரீபெய்ட் பிளானில் நாள் ஒன்றுக்கு 1GB டேட்டா வீதம் மொத்தம் 20GB டேட்டா மற்றும் நாள் ஒன்றுக்கு 100 SMS வழங்கப்படுகிறது. அத்துடன் 20 நாட்கள் வேலிடிட்டியுடன் வரம்பற்ற வாய்ஸ் காலையும் வழங்குகிறது.

அமெரிக்க H1B விசா பெற திட்டமிடுவோருக்கு சூப்பர் அறிவிப்பு – நேர்காணல் இல்லை!

அதையடுத்து ரூ.179 ப்ரீபெய்ட் பிளானில் தினசரி 1GB டேட்டா வீதம் 24 நாட்களுக்கு 24GB வழங்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 100 SMS மற்றும் வரம்பற்ற வாய்ஸ் காலையும் வழங்குகிறது.

ரூ.199 ப்ரீபெய்ட் பிளானில் நாள் ஒன்றுக்கு 1.5GB டேட்டா வீதம் 34.5GB வழங்கப்படுகிறது. தினசரி 100 SMS மற்றும் வரம்பற்ற வாய்ஸ் காலையும் 23 நாட்களுக்கு வழங்குகிறது. அத்துடன் இந்த அனைத்து ப்ரீபெய்ட் பிளான்களிலும் ஜியோ ஆப்ஸிற்கான காம்ப்ளிமென்ட்ரி சப்ஸ்கிரிப்ஷன் வழங்கப்படுகிறது.

ஏர்டெல் பிளான்கள்:

முதலாவதாக ரூ.155 பிரீபெய்டு பிளானில் 1GB டேட்டா, 300 SMS அன்லிமிட்டட் வாய்ஸ் கால்ஸ் போன்ற பலன்களை பெற முடியும். இத்திட்டமானது 24 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.

இன்று (டிச.24) முதல் 6 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

அதையடுத்து ரூ.179 பிரீபெய்டு பிளானில் மொத்தம் 2GB டேட்டா, அன்லிமிட்டட் வாய்ஸ் கால் மற்றும் 300 SMS போன்ற பலன்களை பெற முடியும். இந்த பிரீபெய்டு பிளான் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. இந்த இரண்டு பிளானிலும் கூடுதல் நன்மையாக ஃப்ரீ ஹலோ ட்யூன்களுக்கான சப்ஸ்கிரிப்ஷன் மற்றும் ஃப்ரீ வின்க் மியூசிக் வழங்கப்படுகிறது.

வோடபோன் ஐடியா பிளான்கள்:

வோடபோன் ஐடியாவில் ரூ.179 பிரீபெய்டு பிளானில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்ஸ், மொத்தம் 2GB டேட்டா மற்றும் 300 SMS போன்ற பலன்களை 28 நாட்கள் வேலிடிட்டியுடன் பெற முடியும்.

அடுத்ததாக ரூ.199 பிளானில் தினசரி 1GB டேட்டா மற்றும் 100 SMS, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்ஸ் போன்றவற்றை வழங்குகிறது. இத்திட்டம் 18 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. இத்திட்டங்களில் கூடுதல் பலனாக Vi மூவிஸ் மற்றும் டிவி-க்கான ஃப்ரீ சப்ஸ்கிரிப்ஷன் போன்ற பலன்களையும் பெற முடியும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!