Reliance Jio பயனர்களுக்கு சூப்பரான அறிவிப்பு – ரூ.150க்குள் ரீசார்ஜ் திட்டங்கள்!
ரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது. அந்த வகையில் ஜியோவின் ரூ.149 திட்டம், ஜியோவின் ரூ.152 திட்டம், ஜியோவின் ரூ.179 திட்டம் ஆகிய குறைந்த விலை திட்டங்கள் ஆகும். இந்த திட்டங்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.
ரீசார்ஜ் திட்டங்கள்:
இந்தியாவின் முன்னணி நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ நாடு முழுவதும் 4ஜி சேவைகளை வழங்க உரிமம் பெற்றுள்ளது. தற்போது சோதனை அடிப்படையில் இயங்கிவருகிறது. இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. தற்போது ஜியோ 30.6 கோடி பயனாளர்களை பெற்றுள்ளது. இந்த சாதனையை கடந்த இரண்டரை ஆண்டுகளில் படைத்துள்ளது. இருப்பினும் கடந்த ஆண்டு ஜியோ தனது ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தியது. ஆனால் வாடிக்கையாளரகளை கவரும் வண்ணம் மற்ற நிறுவனங்களை விட ஜியோவில் குறைந்த விலை திட்டங்கள் உள்ளன.
ரயிலில் பயணம் செய்வோருக்கு ஹாப்பி நியூஸ் – புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
இந்த திட்டங்களில் அதிகமான சிறப்பம்சங்கள் உள்ளன. ஜியோவின் ரூ.149 திட்டத்தில் 20 நாட்கள் வேலிடிட்டி மற்றும் தினமும் 1GB டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் மொத்தம் 20GB டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் வழங்கப்படுகிறது. இதனை தொடர்ந்து தினமும் 100 SMS கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் ஜியோ பயன்பாடுகளுக்கான அணுகல் கிடைக்கிறது. இந்த வகையில் ஜியோவின் ரூ.152 திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் வழங்கப்படுகிறது. இதனை தொடர்ந்து 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இது ஜியோ போன் திட்டம். ஒரு நாளைக்கு 0.5 GB டேட்டா இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது மற்றும் மொத்தம் 14 ஜிபி டேட்டா உள்ளது. மொத்தம் 300 SMS வழங்கப்படுகிறது.
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றோருக்கு ஷாக் நியூஸ் – வட்டியை செலுத்த அறிவுறுத்தல்!
இந்த வகையில் ஜியோ பயன்பாடுகளுக்கான இலவச அணுகலும் கிடைக்கிறது. அடுத்த திட்டமான ஜியோவின் ரூ.179 திட்டத்தில், தினமும் 1GB டேட்டா வழங்கப்படுகிறது, அதாவது மொத்தம் 24 GB டேட்டா மீதம் உள்ளது. வேலிடிட்டியைப் பொறுத்தவரை, இந்த திட்டம் 24 நாட்களுக்கு நீடிக்கும். இந்த திட்டத்தில் அனைத்து நெட்வொர்க்குகளிலும் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் வழங்கப்படுகிறது. தினமும் 100 SMS கிடைக்கும். இந்த திட்டத்தில் ஜியோ சினிமா, ஜியோ டிவி, ஜியோ கிளவுட் மற்றும் ஜியோ செக்யூரிட்டி க்கான இலவச சந்தா ஆகியவை உள்ளன.