இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் பதவிக்காலம் மேலும் 3 ஆண்டுகள் நீட்டிப்பு – மத்திய அரசு முடிவு!

0
இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் பதவிக்காலம் மேலும் 3 ஆண்டுகள் நீட்டிப்பு - மத்திய அரசு முடிவு!
இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் பதவிக்காலம் மேலும் 3 ஆண்டுகள் நீட்டிப்பு - மத்திய அரசு முடிவு!
இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் பதவிக்காலம் மேலும் 3 ஆண்டுகள் நீட்டிப்பு – மத்திய அரசு முடிவு!

இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸின் பதவிக்காலம் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து ஒன்றிய அரசின் கேபினட் நியமனங்களுக்கான குழு அறிவித்துள்ளது.

பதவிக்காலம் நீட்டிப்பு:

சக்திகாந்த தாஸ் அவர்கள் இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநராக பணியாற்றி வருகிறார். மேலும், முன்னாள் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாவார். இந்திய ரிசர்வ் வங்கியின் 25 ஆவது ஆளுநராக தற்போதுள்ளார். இதற்கு முன்னர் இந்தியாவின் பதினைந்தாம் நிதி ஆணையத்தின் உறுப்பினராகவும், ஜி 20 இந்தியப் பிரதிநிதியாகவும் இருந்துள்ளார். பொருளாதார விவகாரச் செயலாளர், வருவாய்த்துறைச் செயலாளர், உரத்துறைச் செயலாளர் உட்பட இந்திய ஆட்சிப் பணியில் மத்திய மற்றும் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றியவர்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய உத்தரவு – சொத்து மற்றும் கடன் விவர அறிக்கை சமர்ப்பிப்பு!

இவர் ஒடிசா மாநிலத்தில் பிறந்தவர். புவனேஷ்வர் நகரில் டிமான்ஸ்ட்ரேஷன் மல்டிபர்பஸ் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். புதுதில்லி புனித ஸ்டீபன் கல்லூரியில் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டம் பெற்றார். 2014 ஜூன் மாதம் நியமனத்திற்கான அமைச்சரவைக் குழுவின் பரிந்துரையில் வருவாய்த்துறை செயலாளராக பணியாற்றியுள்ளார். தொழில்துறை தலைமை செயலர், வருவாய் துறை சிறப்பு ஆணையர், வணிகவரித்துறை செயலர், எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக் குழுகத்தின் திட்ட இயக்குநர், திண்டுக்கல் மற்றும் காஞ்சிபுர மாவட்ட ஆட்சித் தலைவர் என தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றியவர்.

தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை – கனமழை எதிரொலி!

இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநராக கடந்த 2018ம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் நிலையில், இவரது பணிக்காலம் டிசம்பர் 10ம் தேதியுடன் முடிவடைய இருந்தது. இந்நிலையில் சக்திகாந்த தாஸ் பதவிக்காலத்தை மூன்று ஆண்டுகள் நீட்டிப்பு செய்து மத்திய அரசின் கேபினட் நியமனங்களுக்கான குழு அறிவித்துள்ளது. இதனால் இவர் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நீடிப்பார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!