தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய உத்தரவு – சொத்து மற்றும் கடன் விவர அறிக்கை சமர்ப்பிப்பு!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய உத்தரவு - சொத்து மற்றும் கடன் விவர அறிக்கை சமர்ப்பிப்பு!
தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய உத்தரவு - சொத்து மற்றும் கடன் விவர அறிக்கை சமர்ப்பிப்பு!
தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய உத்தரவு – சொத்து மற்றும் கடன் விவர அறிக்கை சமர்ப்பிப்பு!

தமிழகத்தில் அரசுப் பணியில் இருக்கும் ஒவ்வொரு ஊழியர்களும் தமிழ்நாடு அரசு பணியாளர் நடத்தை விதிகள் 1973 ன் படி தங்களது சொத்து மற்றும் கடன் விபரத்தை சமர்ப்பிக்குமாறு பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

அரசுப் பணியாளர்கள்:

தமிழகத்தில் அரசுப் பணிகளில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் அனைவரும் அவர்களது கடன் மற்றும் சொத்து விபரங்களை அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும். இந்த அறிக்கையானது தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தை விதி 1973-ன் படி சமர்ப்பிக்க வேண்டும். அதாவது அரசு ஊழியர் மற்றும் அவரது குடும்பத்தினர் அவர்களது நண்பர்கள், நண்பர் அல்லாதவர்கள், உறவினர்கள், உறவினர் அல்லாதவர்கள் என 5 ஆயிரத்திற்கும் அதிகமான மதிப்பில் பரிசுகள் ஏதும் பெற கூடாது. பின்னர் வரதட்சணை வாங்கவோ, கொடுக்கவோ துணை நிற்கவே கூடாது. தேவையில்லாமல் எதற்கும் நிதி திரட்டல் கூடாது.

நடிகர் ரஜினிக்கு மாரடைப்பா ? – மருத்துவமனையில் திடீர் அனுமதி!

ஒருசில வரம்புகளுக்கு மேல் முதலீடுகள் வைக்க கூடாது. கடன் கொடுக்கல் மற்றும் வாங்கல் என அதிகம் இருக்க கூடாது. சொத்துக்களை விற்கவோ அல்லது வாங்கவோ செய்தால் அதற்கான நிதி ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும். இந்த அசையும் அல்லது அசையா சொத்துக்களை அவர் பெயரிலோ அல்லது அவரது குடும்ப உறுப்பினர் பெயரிலோ வாங்க , விற்க செய்தாலும் நிதி ஆதாரம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இந்த விதிமுறைகள் தான் தமிழ்நாடு அரசு பணியாளர் நடத்தை விதி 1973- ல் உள்ளது.

தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை – கனமழை எதிரொலி!

இந்த தமிழ்நாடு அரசு பணியாளர் நடத்தை விதி 1973- ன் கீழ் அனைத்து துறையைச் சேர்ந்த அரசு பணியாளர்களும் அவர்களது சொத்து மற்றும் கடன் தொகையை அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும். அந்த அறிக்கையினை அட்டவணையில் குறிப்பிட்டுள்ள படிவங்கள் I முதல் V வரை பூர்த்தி செய்து உரிய காலத்தில் சமர்பித்தலை உறுதிபடுத்துமாறு பள்ளி கல்வி இயக்குநர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். எனவே அனைவரும் விரைந்து செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!