8.05% வட்டி விகிதத்தில் ஒரு முதலீடு – இது நல்லா இருக்கே!
இன்றைய கால கட்டத்தில் சேமிப்பு என்பது இன்றியமையாத ஒன்றாக மாறியுள்ளது. அதை ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் அமலில் உள்ளது. முதலீடு செய்யப்படும் தொகை பத்திரமாக இருக்க வேண்டும் என்று எண்ணுபவருக்கு ஃப்ளோட்டிங் ரேட் சேவிங்ஸ் பாண்ட் ஒரு நல்ல முதலீடாக இருக்கும். இதற்கு ஜூலை முதல் டிசம்பர் வரையிலான காலாண்டுக்கு தற்போது 8.05% வட்டி விகிதம் வழங்கப்பட்டு வருகிறது.
மியூச்சுவல் பண்ட் மூலம் கோடீஸ்வரர் ஆக முடியுமா? கட்டாயம் முடியும் தெரிஞ்சுக்கோங்க!
ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவில் வழங்கப்படும் இந்த பத்திரத்தின் வட்டி விகிதம் தேசிய சேமிப்புச் சான்றிதழின் (NSC) வட்டி விகிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. RBI ஃப்ளோட்டிங் ரேட் பத்திரங்களின் வட்டி விகிதம் NSC வழங்கும் வட்டியை விட 0.35% அதிகமாக காணப்படுகிறது. மேலும் ரெப்போ வட்டி விகிதத்தை பொறுத்து 6 மாதத்திற்கு ஒருமுறை இந்தப் பத்திரங்களுக்கான வட்டி விகிதமும் மாறுபடும்.

























