
சிபில் ஸ்கோர் குறித்த புதிய விதிகளை அறிவித்த ரிசர்வ் வங்கி.. வங்கிகள் சரியான பதில் அளிக்காவிட்டால் அபராதம் செலுத்த உத்தரவு..
சிபில் ஸ்கோர் (CIBIL Score) என்பது 300 – 900 வரையிலான மூன்று இலக்க எண்ணாகும், இது உங்கள் கடன் தகுதியை குறிக்கிறது. மேலும், கடன்கள் மற்றும் கிரெடிட் கார்டுகளின் விரைவான ஒப்புதல் மற்றும் சிறந்த ஒப்பந்தங்களைப் பெற இந்த சிபில் ஸ்கோர் உதவுகிறது. இந்நிலையில் சிபில் ஸ்கோர் தொடர்பாக ரிசர்வ் வங்கிக்கு பல புகார்கள் வந்ததால்,சிபில் ஸ்கோர் தொடர்பாக புதிய விதிகளை ரிசர்வ் வங்கி அமல்படுத்தியுள்ளது.
அதாவது, கிரெடிட் ஸ்கோர் 15 நாட்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட வேண்டும் என்றும், இந்த விதி ஜனவரி 1, 2025 முதல் அமலுக்கு வரும் என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும் CIBIL ஸ்கோரை ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி மற்றும் அதற்குப் பிறகு அப்டேட் செய்து கொள்ளலாம். இந்த விதியானது கடன் கொடுக்கும் போது வங்கிகள் சரியான முடிவை எடுக்க உதவுவது மட்டுமின்றி மோசமான CIBIL ஸ்கோர் கொண்டவர்கள் அதை சரி செய்யும் வாய்ப்பையும் அறிந்து கொள்ள உதவுகிறது. மேலும், வாடிக்கையாளரின் கடன் அறிக்கை ஏதேனும் நிறுவனம் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டு இருந்தால் அது குறித்த தகவல் வாடிக்கையாளருக்கு SMS அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து வாடிக்கையாளரின் கடன் கோரிக்கை நிராகரிப்பட்டால் அதற்கான சரியான காரணத்தை அவருக்குத் தெரிவிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கடன் நிறுவனங்கள் ஆண்டுதோறும் ஒரு முறை வாடிக்கையாளர்களின் முழுமையான கிரெடிட் ஸ்கோர் விவரங்களை கட்டணம் ஏதும் இல்லாமல் அளிக்க வேண்டும் எனவும், மேலும் கிரெடிட் ஸ்கோர் தொடர்பான விவகாரங்களில் தீர்வு காண்பதற்கு நோடல் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் எனவும், இதை தொடர்ந்து கடன் வழங்கும் நிறுவனங்கள் வாடிக்கையாளரின் புகார்களை 30 நாட்களுக்குள் தீர்க்க இயலாவிட்டால், தாமதமாகும் ஒரு நாளுக்கு 100 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


























Good decision Reserve Bank of India
I think this decision taken by the Reserve Bank has brought great benefit to the people and I definitely need to implement it.
Fantastic decesion
The CIBIL department itself is doing wrong. The lender management says that after taking a loan from a bank and repaying it, they still have to repay the loan. No effort was made to take corrective action on it. We people don’t know who to complain to if the lending banks fail.