தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – புகார் அளிப்பது எப்படி? முழு விபரம் இதோ!

0
தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு - புகார் அளிப்பது எப்படி? முழு விபரம் இதோ!
தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு - புகார் அளிப்பது எப்படி? முழு விபரம் இதோ!
தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – புகார் அளிப்பது எப்படி? முழு விபரம் இதோ!

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் ஏற்படும் முறைகேடு தொடர்பான புகார் தெரிவிக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு வழிமுறைகளை வழங்கியுள்ளது. அந்த வகையில் ரேஷன் தொடர்பான புகார் அளிப்பதற்கான எளிய வழிமுறைகளை இந்த பதிவில் காணலாம்.

ரேஷன் புகார்:

தமிழகத்தில் அனைத்து மக்களுக்கும் நியாயவிலை பொருட்கள் வழங்கும் விதமாக ஒவ்வொரு குடும்பங்களுக்கும் ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த ரேஷன் அட்டைகள் மூலம் அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் மற்றும் கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பொருட்கள் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் நியாவிலைக்கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு ரேஷன் பொருட்கள் வழங்குவதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக தொடர்ந்து புகார் தெரிவிக்கப்படுகிறது.

டிசம்பர் 24 முதல் ஜனவரி 20 வரை முழு ஊரடங்கு அமல் – அரசு உத்தரவு!

அதாவது பொருட்கள் வாங்க செல்லும் போது பொருட்கள் இல்லை என்று திருப்பி அனுப்புதல், ரேஷன் பொருட்களின் அளவை குறைத்தல் உள்ளிட்ட பதுக்கல் மற்றும் ஒதுக்கல் போன்ற முறைகேடுகள் நடைபெற்று வருகிறது. இந்த முறைகேடுகளை நாம் அரசுக்கு தெரிவிக்கும் வகையில் பல்வேறு வழிமுறைகளை தமிழக அரசு வழங்கியுள்ளது. அவ்வாறு ரேஷன் முறைகேடுகளை மக்கள் அரசுக்கு தெரிவிப்பதற்காக உள்ள வழிமுறைகள் குறித்த விபரங்களை இந்த பதிவில் காணலாம்.

ரேஷன் முறைகேடு புகார் அளிக்கும் வழிமுறைகள்:

1. ரேஷன் ஊழியர் தரக்குறைவாக நடத்தினால் – 1967

2. ரேஷன் தொடர்பான புகார் – 18004255901

ஆன்லைன் மூலம் புகார் பதிவு செய்வதற்கான வழிமுறை:

1. முதலில்  www.tnpds.gov.in என்ற இணையதள முகவரிக்கு செல்ல வேண்டும். பின்னர் தோன்றும் பக்கத்தில் உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண் உள்ளிட்ட விபரங்களை கொடுத்து எவ்வித பிரச்சனை என்பதை கொடுக்க வேண்டும்.

2. அதில் FPS Shopkeeper என்பதை தேர்வு செய்து உங்களது பிரச்னையை பதிவு செய்ய வேண்டும்.

3. அதன்பின் உங்களது மொபைல் எண்ணுக்கு புகார் பதிவு செய்ததற்கான ID வரும். அதனை பயன்படுத்தி உங்களது புகாரின் நிலையை தெரிந்துகொள்ளலாம்.

மொபைல் ஆப் மூலம் புகார் பதிவு செய்வதற்கான வழிமுறை:

1. முதலில் TNEPDS மொபைல் ஆப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

2. அதன்பின் உங்களது ரேஷன் அட்டையில் பதிவு செய்துள்ள மொபைல் எண்ணை கொடுத்து Login செய்து, அதில் உங்களது புகாரை பதிவு செய்யலாம்.

ரேஷன் கடை குறித்த இதர தகவல்கள் அறிவது எப்படி?

1. உங்களது ரேஷன் அட்டையில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 101 என்று டைப் செய்து 9980904040 என்ற எண்ணுக்கு அனுப்பினால் உங்களது ரேஷன் கடையில் எந்தெந்த பொருட்கள் இருப்பில் உள்ளது என்று தெரிந்துகொள்ளலாம்.

2. PDS 102 என்று டைப் செய்து 9980904040 என்ற எண்ணுக்கு அனுப்பினால் உங்களது ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள முடியும்.

ரேஷன் அட்டைகளின் வகைகள் மற்றும் அதன் பயன்கள்:

1. PHH – முன்னுரிமை, அரிசி உட்பட்ட அனைத்து பொருட்களும் கிடைக்கும்.

2. PHH – AAY – 35 கிலோ அரிசி உட்பட அனைத்து பொருட்களும் கிடைக்கும்.

3. NPHH – முன்னுரிமை இல்லாதவர்கள், அரிசி உட்பட அனைத்து பொருட்களும் கிடைக்கும்.

4. NPHH-S – அரிசியை தவிர மற்ற பொருட்கள் அனைத்தும் வழங்கப்படும்.

5. NPHH-NC – எந்த பொருட்களும் வழங்கப்படமாட்டாது. ஒரு அடையாள ஆவணமாக மட்டுமே ரேஷன் அட்டையை பயன்படுத்த முடியும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here