அனைத்து பள்ளிகளுக்கும் டிச. 25 முதல் விடுமுறை – கல்வி வாரியம் முக்கிய அறிவிப்பு!
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறை நாட்கள் குறித்த அறிவிப்பை RBSE வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
விடுமுறை
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இது குறித்து ராஜஸ்தான் இடைநிலை கல்வி வாரியம் வெளியிட்ட அறிவிப்பின் படி, குளிர்கால விடுமுறை டிசம்பர் 25ம் தேதி முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு – மசோதா இன்று தாக்கல்!
மேலும் இந்த அறிவிப்பை தொடர்ந்து RBSE BOARD தேர்வுக்கான தேதி குறித்த அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது. அதன் படி ராஜஸ்தான் வாரியத்தின் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் பிப். 15ம் தேதி ஏப்ரல் 10ம் தேதி வரை நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான அட்டவணை இன்னும் வெளியிடவில்லை.