ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி கல்விக்கட்டணம் நிர்ணயம் – அரசாணை வெளியீடு!!

0
ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி கல்விக்கட்டணம் நிர்ணயம் - அரசாணை வெளியீடு!!
ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி கல்விக்கட்டணம் நிர்ணயம் - அரசாணை வெளியீடு!!
ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி கல்விக்கட்டணம் நிர்ணயம் – அரசாணை வெளியீடு!!

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மாணவர்கள் அரசுக்கல்லூரிகளுக்கு இணையாக கல்விக்கட்டணத்தை நிர்ணயம் செய்யக்கோரி கடந்த 57 நாட்களாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், தமிழக அரசு கல்விக்கட்டணத்தை நிர்ணயம் செய்து அதற்கான அரசாணையை தற்போது வெளியிட்டு உள்ளது.

அரசாணை வெளியீடு:

ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியில் அதிக கல்விக்கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் அளித்த மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் தோல்விலயில் முடிந்த நிலையில், அக்கல்லூரி தமிழக சுகாதாரத்துறையின் கீழ் கொண்டுவரப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால் அதில் கல்விக்கட்டணம் குறித்த விபரங்கள் இல்லை என கூறிய மாணவர்கள், போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்து வந்தனர்.

தமிழக அரசு வழங்கும் 2ஜிபி இலவச டேட்டா – கல்லூரி பேராசிரியர்களுக்கு வழங்க கோரிக்கை!!

தற்போது ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியின் கல்விக்கட்டணம் அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு இணையாக நிர்ணயம் செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி எம்.பி.பி.எஸ் படிப்புக்கு ரூ.13,610க்கும், பி.டி.எஸ் படிப்புக்கு ரூ.11,610ம் ஆண்டு கட்டணமாகவும், எம்.டி., எம்.எஸ்., எம்.டி.எஸ்., படிப்புகளுக்கு ரூ.30 ஆயிரம் டியூசன் கட்டணமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

தமிழக பல்கலைக்கழகங்களில் அரியர் தேர்வுகள் – உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!!

பி.எஸ்.சி நர்சிங் டியூசன் கட்டணம் ரூ.3 ஆயிரம், எம்.எஸ்.சி நர்சிங் டியூசன் கட்டணம் ரூ.5 ஆயிரம் மற்றும் முதுநிலை மருத்துவ டிப்ளமோ படிப்புகளுக்கான டியூசன் கட்டணம் ரூ. 20 ஆயிரம் ஆக நிர்ணயம் செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!