சாஹலின் சூழலில் சுருண்ட கொல்கத்தா.. IPL வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த பஞ்சாப்..!!
ஐபிஎல் 2025 சீசனின் 31 வது ஆட்டம் சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று (15-04-2025) நடைபெற்றது. இதில் பஞ்சாப் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடிய நிலையில் 15.3 ஓவர்கள் முடிவில் 111 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. பின்னர் களமிறங்கிய கொல்கத்தா அணி 15.1 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 95 ரன்கள் எடுத்த நிலையில் பஞ்சாப் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியின் மூலம் ஐபிஎல் வரலாற்றிலேயே மிகக் குறைந்த இலக்கை நிர்ணயித்து வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை பஞ்சாப் அணி படைத்துள்ளது. மேலும், கொல்கத்தாவிற்கு எதிராக “யுஸ்வேந்திர சாஹல் 4 ஓவர்கள் பந்து வீசி ரகானே, ரகுவன்ஷி, ரிங்கு சிங் மற்றும் ரமன்தீப் சிங் ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்து ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்”. மேலும், கடந்தாண்டு ஈடன் காடன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், கொல்கத்தா அணி நிர்ணயித்த 262 ரன்கள் என்ற இமாலய இலக்கை பஞ்சாப் அணி எட்டிப்பிடித்து போல நேற்றைய போட்டியிலும் சிறப்பாக செயல்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


























