புதுச்சேரியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை – பிரதமர் மோடி வருகை எதிரொலி!!

0
புதுச்சேரியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை - பிரதமர் மோடி வருகை எதிரொலி!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை - பிரதமர் மோடி வருகை எதிரொலி!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை – பிரதமர் மோடி வருகை எதிரொலி!!
பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு திட்டங்கள் துவக்கம் மற்றும் தேர்தல் பிரச்சார பணிகளுக்காக இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வருகிறார். இதனால் புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி வருகை:

நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று காலை தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்தார். அவரை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் வரவேற்றார். பின்னர் தனி ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரிக்கு செல்கின்றார். இன்று முழுவதும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

பிப்.28 திருச்சியில் வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

புதிய திட்டங்கள்:

புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு ரூ.3,023 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் இன்று தொடங்கி வைக்கிறார். அடுத்ததாக, புதுச்சேரி லாஸ்பேட்டையில் பாஜக கட்சியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

TN Job “FB  Group” Join Now

பள்ளிகளுக்கு விடுமுறை:

பிரதமரின் வருகையினால் புதுச்சேரி நகர்ப்பகுதி முழுவதும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்வதில் சிரமங்கள் உண்டாகும் என்பதால் பள்ளி கல்வித்துறை இயக்குனரின் அறிவுறுத்தலின் படி, புதுச்சேரியில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகள் அனைத்துக்கும் இன்று ஒரு நாள் (25.2.2021) விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!