புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை – அரியணை ஏறப்போவது யார்?
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் சட்டபேரவை தேர்தல் கடந்த மாதம் 6 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான இறுதி முடிவுகள் நாளை (மே 2) வெளியாகவுள்ளது.
தேர்தல் முடிவுகள்:
புதுச்சேரி உட்பட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் கடந்த மாதம் துவங்கியது. புதுச்சேரி சட்டமன்ற பேரவையின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதம் 4 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் அடுத்த சட்டப்பேரவைக்கான தேர்தல் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற்றது. முன்னதாக புதுச்சேரியில் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சியின் முதல்வர் நாராயணசாமியின் ஆட்சி சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை இழந்தது.
மெட்ராஸ் யூனிவர்சிட்டி வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி நாள்!!!
இதன் பிறகு அங்கு ஆளுநரின் ஆட்சி அமைக்கப்பட்டது. இதனுடன் புதுச்சேரி அரசு சட்டபேரவை தேர்தலை சந்தித்தது. அங்கு பெரும்பான்மையாக விளங்கும் என்டிஏ, யுபிஏ கட்சிகள் அதன் கூட்டணியுடன் இணைந்து தேர்தலை சந்தித்தது. அதன்படி புதுச்சேரியில் உள்ள நான்கு மாவட்டங்களிலும் உள்ள 30 தொகுதியில் தேர்தல் நடைபெற்றது. அந்த மாவட்டங்களில் மொத்தம் 81.64% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. அமைதியாக முடிந்துள்ள புதுச்சேரி சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நாளை (மே 2) துவங்குகிறது.
TN Job “FB
Group” Join Now
Times Now நிறுவனத்தின் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பின்படி, என்டிஏ கட்சி : 18, யுபிஏ கட்சி: 12 இடங்களை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதுச்சேரியில் மே 2 (நாளை) காலை முதல் வாக்கு எண்ணும் பணிகள் தொடங்க உள்ள நிலையில், பிற்பகல் முதலே முன்னிலை விபரங்கள் வெளிவர தொடங்கும். புதுச்சேரி தேர்தல் முடிவுகளை உடனடியாக தெரிந்து கொள்ள நமது Tamil Examsdaily வலைத்தளத்துடன் இணைந்திருங்கள்.