“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சித்ராவுடன் அலப்பறை செய்த ஜீவா – பிறந்தநாளில் வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உருக்கம்!

0
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சித்ராவுடன் அலப்பறை செய்த ஜீவா – பிறந்தநாளில் வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உருக்கம்!

விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் பிரபலமடைந்தவர் விஜே சித்ரா. பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளர் பணி, சீரியல் என வேலை செய்திருந்தாலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் முல்லை கதாபாத்திரம் இவருக்கு நல்ல பெயரைப் பெற்று தந்தது. இன்று விஜே சித்ராவின் பிறந்தநாளை ஒட்டி சின்னத்திரை பிரபலங்கள் பலரும் அவருடனான நினைவுகளை பகிர்ந்துள்ளனர்.

பிறந்தநாளில் வைரலாகும் வீடியோ:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மக்கள் மத்தியில் அதிக ஆதரவை பெற்றுள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் எத்தனை ஜோடிகள் நடித்து வந்தாலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஜோடி என்றால் கதிர் – முல்லை ஜோடி தான். இதில் கதிராக நடிகர் குமரனும், முல்லையாக நடிகை சித்ராவும் நடித்து வந்தனர். தொகுப்பாளராக அறிமுகமாகி சின்னத்திரை நடிகையாக கலக்கி கொண்டிருந்தவர் விஜே சித்ரா. இதற்கிடையே கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி பூந்தமல்லியில் உள்ள தனியார் ஹோட்டல் அறையில் சடலமாகக் கிடந்தார் சித்ரா. முன்னதாக சித்ராவுக்கும் ஹேம்நாத் என்பவருக்கும் திருமணம் நிச்சயமாகி இருந்தது.

திருமண கோலத்தில் வீடியோ வெளியிட்ட “பாரதி கண்ணம்மா” வினுஷா – ரசிகர்கள் ஷாக்!

ஆனால் அவர்கள் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வாழ்ந்து வந்த விஷயம் சித்ரா மரணத்திற்குப் பிறகு தான் வெளியுலகிற்கு தெரிய வந்தது. விஜே சித்ரா தற்கொலை விவகாரத்தில் அவரது கணவர் ஹேம்நாத், தற்கொலைக்கு தூண்டியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் கொஞ்சம் நாட்களிலேயே அவர் ஜாமீன் வெளியில் வந்துவிட்டார். இதற்கிடையே மே 2ம் தேதியான இன்று சித்ராவின் 30வது பிறந்தநாள். இதையொட்டி இன்ஸ்டாகிராமில் சித்ராவுக்காக பல உருக்கமான பதிவுகளை ரசிகர்கள் வெளியிட்டு வருகின்றனர். அவர் தற்போது உயிரோடு இல்லாமல் இருந்தாலும் அவருக்கு வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள் அதிகரித்துள்ளனர்.

Exams Daily Mobile App Download

ஒவ்வொரு வருடமும் அவருடைய பிறந்தநாளை ரசிகர்களோடு விஜே சித்ரா கொண்டாடி வந்த நிலையில் இன்று அவருடைய போட்டோவுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். விஜே சித்ரா ரசிகர்களுடைய பிறந்தநாளுக்கு சென்று இன்ப அதிர்ச்சியும் கொடுத்துள்ளார். அதனால் தான் அவர் சின்னத்திரையில் நடிகையாக இருந்தாலும் வெள்ளித்திரை நடிகர்களுக்கு இணையாக ரசிகர்களை பெற்றிருந்தார். அவர் கடைசியாக நடித்து வந்த முல்லை கேரக்டரை யாராலும் மறக்க முடியவில்லை. அதனால் தான் தற்போதும் கூட அவருடைய நினைவாக பல ரசிகர்கள் மனம் உருகி சித்ரா மீதுள்ள தங்கள் அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜீவா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் வெங்கட் உடன் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு சித்ரா செய்த FUN வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் மிஸ் யூ சித்து என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here