தமிழக வாக்குப்பதிவு விகிதத்தில் குளறுபடியா? – தேர்தல் அதிகாரி பதில்!

0
தமிழக வாக்குப்பதிவு விகிதத்தில் குளறுபடியா? - தேர்தல் அதிகாரி பதில்!

தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதத்தில் குளறுபடிகள் இருப்பதாக வெளியான தகவலை அடுத்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ளார்.

தேர்தல் வாக்குப்பதிவு:

  • நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடத்தப்பட்டது. தேர்தலுக்கு முன்னதாகவே தேர்தல் பாதுகாப்பு பணிகள் மற்றும் வாக்குப்பதிவு செய்யும் evm மெஷின் சோதனை போன்ற அனைத்து கட்ட பணிகளும் மிகவும் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் தேர்தல் வாக்குப்பதிவு நாள் அன்று 72.09 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் முன்னதாக அறிவித்திருந்தது.
  • அதன் பின்னர் தற்போது 69.72 சதவீதம் வாக்கு பதிவுகள் நடந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இதன் காரணமாக வாக்கு பதிவு சதவீதத்தில் குளறுபடிகள் ஏற்பட்டிருப்பதாக பேசப்பட்டது. ஆனால் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு செய்தியாளர்கள் சந்திப்பில் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவு – உச்சநீதிமன்றம் அதிரடி!

  • அனைத்து வாக்கு சாவடி அலுவலர்களும் செயலியில் வாக்குப்பதிவுகளை அப்டேட் செய்ய வேண்டும் என்று எந்த உத்தரவும் இல்லை.
  • செயலில் கிடைத்த தகவல் அடிப்படையில் கணக்கிடப்பட்டதால் முன்னதாக தவறு நடைபெற்றதாகவும், ஒரு சிலர் மட்டுமே செயலில் அப்டேட் செய்ததாகவும் இதன் காரணமாக வாக்குப்பதிவு சதவீத குளறுபடி ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.
  • மேலும் தேர்தல் நடத்தும் அதிகாரியின் அதிகாரப்பூர்வ தகவல்கள் மூலம் கணக்கிடப்பட்டு இறுதியாக விவரங்கள் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
  • மேலும் தமிழ்நாட்டில் எந்த தொகுதியிலும் மறுவாக்கு பதிவு கோரிக்கைகள் வைக்கப்படவில்லை என்றும்.
  • தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது முதல் இன்று வரை ரூபாய் 1308 கோடி மதிப்பிலான பணம் மற்றும் நகையை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!