திருமண கோலத்தில் வீடியோ வெளியிட்ட “பாரதி கண்ணம்மா” வினுஷா – ரசிகர்கள் ஷாக்!

0
திருமண கோலத்தில் வீடியோ வெளியிட்ட
திருமண கோலத்தில் வீடியோ வெளியிட்ட "பாரதி கண்ணம்மா" வினுஷா - ரசிகர்கள் ஷாக்!
திருமண கோலத்தில் வீடியோ வெளியிட்ட “பாரதி கண்ணம்மா” வினுஷா – ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவியில் “பாரதி கண்ணம்மா” சீரியலில் கண்ணம்மாவாக நடித்து வருபவர் வினுஷா தேதி, அவர் திருமண கோலத்தில் நடத்திய போட்டோஷூட் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதனால் அவருக்கு திருமணமா என சமூக வலைத்தளங்களில் தகவல் ஒன்று பரவி வருகிறது.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக நடித்த ரோஷினி சீரியலில் இருந்து விலகிய நிலையில் அவருக்கு பதிலாக களமிறங்கியவர் தான் வினுஷா தேவி. மாடலிங் துறையில் இருந்த அவருக்கு நடிப்பில் இது தான் முதல் வாய்ப்பு, அவர் ஏற்கனவே செய்த டிக்டாக் வீடியோக்கள் பல இன்னும் ட்ரெண்டாக இருக்கிறது. வினுஷாவிற்கு முதல் வாய்ப்பாக இருந்தாலும் தன்னுடைய முழு திறமையையும் அவர் கொடுத்து நடித்து வருகிறார். அதனால் கண்ணம்மா மாற்றிய உணர்வே இல்லாமல் ரசிகர்கள் சீரியல் பார்க்கின்றனர்.

கோபி போனை எடுத்து பேசிய பாக்கியா, அதிர்ச்சியில் ராதிகா – “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்து வருபவை!

மேலும் அவர் வந்த வாரங்களில் TRPயில் நல்ல முன்னேற்றம் இருந்தது. சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் வினுஷா தன்னுடைய விதவிதமான போட்டோஷூட்களை செய்து அந்த புகைப்படங்களையும், வீடியோக்களையும் யூடுப் சேனலில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது மணப்பெண் போல மேக்கப் போட்டு போட்டோஷூட் ஒன்றை நடத்தி இருக்கிறார். அந்த போட்டோஷூட் வீடியோ ஒன்றை அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

அந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. மேலும் அந்த புகைப்படத்தை பார்த்த ஒரு சில யூடுப் சேனல்கள் அவருக்கு திருமணமா என கேள்வி எழுப்பி இருக்கின்றனர். ஆனால் அது வெறும் போட்டோஷூட் தான் என வினுஷா தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. பலரின் மனம் கவர்ந்த கண்ணம்மாவின் இந்த அழகான வீடியோ தற்போது பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டாகி இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!