PKL 2024: கடுமையாக போராடிய தமிழ் தலைவாஸ் தோல்வி.. புள்ளிப்பட்டியலில் அதிரடி சரிவு!!
புரோ கபடி தொடரின் 11-வது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று (அக்டோபர் 25) நடைபெற்ற இத்தொடரின் 15வது ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் அணியை எதிர்த்து தமிழ் தலைவாஸ் அணியினர் களம் கண்டனர். இந்த ஆட்டத்தில், சிறப்பாக விளையாடிய பாட்னா பைரேட்ஸ் அணி 42-40 என்ற புள்ளி கணக்கில் வெற்றியை சொந்தமாக்கியது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
முந்தைய போட்டியில் வெற்றியை ருசித்த தமிழ் தலைவாஸ் மீண்டும் தோல்வி பாதைக்கு திரும்பி உள்ளது. மற்றொரு போட்டியில் புனேரி பல்டன் மற்றும் பெங்களூர் புல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய பெங்களூர் அணி, இறுதி கட்டத்தில் சொதப்பியதால் 36-22 என்ற புள்ளி கணக்கில் புனேரி பல்டன் அணி அபார வெற்றி பெற்றது.
























