ரூ.700க்கும் கீழ் சமையல் கேஸ் சிலிண்டரின் விலை – கலப்பு எரிவாயு சிலிண்டர் அறிமுகம்!

0
ரூ.700க்கும் கீழ் சமையல் கேஸ் சிலிண்டரின் விலை - கலப்பு எரிவாயு சிலிண்டர் அறிமுகம்!
ரூ.700க்கும் கீழ் சமையல் கேஸ் சிலிண்டரின் விலை - கலப்பு எரிவாயு சிலிண்டர் அறிமுகம்!
ரூ.700க்கும் கீழ் சமையல் கேஸ் சிலிண்டரின் விலை – கலப்பு எரிவாயு சிலிண்டர் அறிமுகம்!

இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்து வருவதால் எல்பிஜி கேஸ் சிலிண்டரின் விலையும் அதிகரித்து வருகிறது. அதனால் சாதாரண மக்களால் எரிவாயு சிலிண்டர் வாங்குவது கடினமானதாக உள்ளது. அதனால் சாதாரண மக்களுக்கு பயன்பெறும் வகையில் எல்பிஜி நிறுவனங்கள் கலப்பு எரிவாயு சிலிண்டர் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

கலப்பு எரிவாயு சிலிண்டர்

இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் அத்தியாவசிய தேவைகளுள் ஒன்றாக உள்ளது. இதன் விலை மாதந்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. கொரோனா காலத்தில் சிலிண்டரின் விலை மாதந்தோறும் புதிய உச்சத்தை தொட்டது. மேலும் தற்போது இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்து வருவதால் டீசல், பெட்ரோல் உள்ளிட்ட கச்சா எண்ணெய்யின் விலை அதிகரித்ததை தொடர்ந்து சிலிண்டர் விலையும் அதிகரித்து வருகிறது. அதனால் சாதாரண மக்களால் எரிவாயு சிலிண்டரை வாங்க முடியாத நிலை நிலவி வருகிறது.

அரசு போட்டி தேர்வுக்கு படிப்பவரா? – உங்களுக்கு அறிய வாய்ப்பு..!

இதனை தடுக்க எல்பிஜி நிறுவனங்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி எல்பிஜி நிறுவனங்கள் இணைந்து கலப்பு எரிவாயு சிலிண்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சிலிண்டரின் எடை சாதாரண சிலிண்டரை விட குறைவு. அதாவது இதில் நிரப்பப்படும் வாயுவின் அளவு குறைவானதாக இருக்கும். இரும்பு உருளையை விட இது 7 கிலோ எடை குறைவாக உள்ளது. இதில் மூன்று அடுக்குகள் உள்ளது. அதனால் இது சாதாரண மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அத்துடன் உள்நாட்டு சிலிண்டர் 17 கிலோ ஆனால் இந்த கலப்பு சிலிண்டரின் எடை 20 கிலோவாக உள்ளது.

TNPSC குரூப் 4 VAO தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – பாடத்திட்டம் குறித்த முழு விபரம்!

தற்போது இந்த கலப்பு எரிவாயு சிலிண்டரின் விலையை பற்றி விரிவாக பார்க்கலாம். இந்தியன் ஆயிலின் அறிவிப்புபடி 10 கிலோ எரிவாயு கொண்ட கலப்பு எரிவாயு சிலிண்டரின் விலை மும்பையில் ரூ.634க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் கொல்கத்தாவில் ரூ.652க்கு விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன் சென்னையில் கலப்பு எரிவாயு சிலிண்டர் ரூ.645க்கு விற்பனையாகிறது. மேலும் இது அனைத்து மக்களுக்கும் பயன்படும் வகையில் விரைவில் வழங்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!