தமிழக மக்களுக்கு எச்சரிக்கை.. நாளை (24-04-2025) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகளின் விவரம்..!!
மின்சாரம் நவீன வாழ்க்கையின் இன்றியமையாத பகுதியாகவும் மற்றும் பொருளாதாரத்திற்கான அத்தியாவசிய தேவையாகவும் மாறியுள்ளது. மேலும், மின்சார பயன்பாடு அதிகரிக்கும் நிலையில் தடையில்லா மின்சாரத்தை பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கில், அரசானது பராமரிப்பு பணிகளை மாதம் ஒரு முறை நடத்தி பழுதுகளை சரி செய்து வருகிறது. அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் நாளை (24-02-2025) பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை செய்யப்படும் பகுதிகள்:
சேலம்:
சின்னக்கடை வீதி, அக்ரஹாரம், பட்டை கோவில், மேட்டு தெரு, ஈஸ்வரன் கோயில் பகுதி, பிரட்ஸ் ரோடு, அருணாச்சலம் ஆசாரி தெரு, கல்லாங்குத்து, ATC டிப்போ, கோவிந்தன் தெரு, பெரியார் தெரு, வ.உ.சி மார்க்கெட், பழைய பேருந்து நிலையம், வணிக வளாகம், சிங்க மெத்தை, அசோக் நகர், பாலாஜி நகர், பச்சப்பட்டி, வித்யா நகர், அம்மாபேட்டை மெயின் ரோடு, சேர்மன் ராமலிங்கம் தெரு ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடை செய்யபட உள்ளது.



























