பொங்கல் 2027: புதிய டிசைனில் வேட்டி, சேலை – அமைச்சர் அறிவிப்பு

0

புதிய டிசைனில் வேட்டி, சேலை வழங்க முடிவு: அமைச்சர் விளக்கம்

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி வழங்கப்படும் இலவச வேட்டி, சேலைகளை புதிய வடிவமைப்பில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கைத்தறி, துணிநூல் மற்றும் கதர் துறை அமைச்சர் விஜய் பாலாஜி தெரிவித்துள்ளார்.

4 முழ வேட்டி

பொதுமக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டதில், பெரும்பாலானோர் வெளுக்கப்படாத 8 முழ வேட்டிக்கு பதிலாக வெளுக்கப்பட்ட 4 முழ வேட்டியை விரும்பியதாக அமைச்சர் தெரிவித்தார். இதன் அடிப்படையில் 2027 பொங்கலுக்கு 4 முழ வேட்டி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜரிகை சேலை

பெண்களுக்கு ஜரிகை தைத்த சேலை வழங்கப்பட உள்ளது. மேலும், நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் உற்பத்தி செய்யப்பட்ட வேட்டி, சேலைகளை அரசு கொள்முதல் செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பு

திருவள்ளூர் சரகத்தில் பெடல் தறிகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட 5.25 லட்சம் சேலைகளையும் அரசு கொள்முதல் செய்ய உள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். இதன் மூலம் நெசவாளர்களுக்கு தொடர்ச்சியான வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!