ஒரே நாடு, ஒரே தேர்தல் விரைவில் அமல்.. !! பிரதமர் அறிவிப்பு..!!
சர்தார் வல்லபாய் படேலின் 149 வது பிறந்தநாளை முன்னிட்டு குஜராத்தில் உள்ள ஒற்றுமை சிலைக்கு பிரதமர் நரேந்திர மோதி நேற்று மலர் தூவி மரியாதை செலுத்தினர். அப்போது பேசிய அவர், ” நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் விவாதிக்கப்பட்டு நடைமுறைக்கு கொண்டுவரப்படும்” எனவும், “ஆதார், ஒரே நாடு ஒரே வரி முறையாக ஜி.எஸ்.டி என தேச ஒற்றுமைக்கான அர்ப்பணிப்பு அரசின் ஒவ்வொரு செயலிலும் பிரதிபலிக்கிறது” என்றார். மேலும், ” ஒரே நாடு ஒரே ரேஷன், ஒரே நாடு ஒரே மருத்துவ காப்பீடு என ஏழை மக்களுக்கான சேவைகள் ஒருங்கிணைப்பு, பொது சிவில் சட்டம், ஒரே அரசியலமைப்பு என நாட்டை ஒருங்கிணைக்கும் பணிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது” எனவும்,” சாதியை வைத்து நாட்டை பிளவுப்படுத்தவும், நாட்டின் வளர்ச்சியை தடுக்கவும் எதிர்க்கட்சிகள் முயற்சி” எனவும் அவ்வுரையில் கூறினார்.

























