பிரதமர் மோடியின் ‘மனதில் குரல்’ நிகழ்ச்சி – விழுப்புரம் பள்ளி ஆசிரியைக்கு பாராட்டு!!

0
பிரதமர் மோடியின் 'மனதில் குரல்' நிகழ்ச்சி - விழுப்புரம் பள்ளி ஆசிரியைக்கு பாராட்டு!!
பிரதமர் மோடியின் ‘மனதில் குரல்’ நிகழ்ச்சி – விழுப்புரம் பள்ளி ஆசிரியைக்கு பாராட்டு!!
மாதம் ஒரு முறை நடக்கும் பிரதமரின் “மன் கீ பாத்” நிகழ்ச்சியில் தமிழகத்தை சேர்ந்த கோவை மாவட்ட இளம் பெண் மற்றும் விழுப்புரத்தை சேர்ந்த ஆசிரியை இருவரையும் மோடி பாராட்டியுள்ளார்.

கோவை காயத்ரி:

கோவை மாவட்டடத்தை சேர்ந்த காயத்ரி என்ற 24 வயது இளம்பெண் ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் வளர்ப்பு பிராணிகளின் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மேலும் ஊரடங்கு காலத்தில் வளர்ப்பு பிராணிகள் வளர்ப்பதற்கு ஆசைப்பட்டு தேடி வந்துள்ளார். அப்போது பின்னங்கால்களை இழந்து வாடிய நிலையில் உள்ள ஒரு நாயை பற்றி அறிந்து அதை எடுத்து வந்துள்ளார். அதற்கு “வீரா” எனவும் பெயரிட்டு வளர்த்து வந்துள்ளார்.

ஓட்டுநர் & வாகன உரிமம் புதுப்பிக்கும் காலம் மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு – மத்திய அரசு அறிவிப்பு!!

ஆனால் கால்களை இழந்து தவிக்கும் இந்த நாய்க்கு உதவி செய்ய நினைத்து மெக்கானிக்கல் பொறியாளரான தனது தந்தையின் உதவியுடன் அதற்காக சிறு குழாய்களை கொண்டு ஒரு சிறிய வண்டி ஒன்றை செய்துள்ளார். அதில் இருக்கை வசதி வைத்து அமைத்துள்ளார். இதற்காக அவர் ரூ.1,000 செலவும் செய்துள்ளார். இந்த புதிய வண்டியில் முதலில் சிரமப்பட்ட “வீரா” பிறகு நன்கு பழகியுள்ளது. இதற்காக பிரதமர் காயத்ரியை பாராட்டியுள்ளார்.

விழுப்புரம் ஆசிரியர் ஹேமலதா:

விழுப்புரத்தை சேர்ந்த தமிழ் ஆசிரியரான ஹேமலதா என்பவர் தனது மாணவர்கள் நோய்த்தொற்று காலத்திலும் எந்த இடையூரும் இல்லாமல் பாடங்களை பயில வேண்டும் என நினைத்தார். அதற்காக அனைத்து பாடங்களையும் அனிமேஷன் வடிவில் உருவாக்கி தனது மாணவர்களுக்கு பென்டிரைவ் வாயிலாக கொண்டு சேர்த்துள்ளார். மேலும், பாடங்கள் சம்பந்தமான மாணவர்களின் சந்தேகங்களுக்கு தொலைபேசி வாயிலாகவும் பதில் அளித்துள்ளார். இந்த ஆசிரியரின் முயற்சியை பாராட்டியுள்ளார் பிரதமர் மோடி.

அரசு ஊழியர்களின் சம்பளம் அதிரடி உயர்வு – தமிழக அரசு திட்டம்!!

விழுப்புரத்தை சேர்ந்த சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியரான எஸ்.திலீப் என்பவர் மாணவர்களின் ஆங்கிலம் கற்கும் ஆர்வத்தை வளர்த்து வருகிறார் என்று பிரதமர் பாராட்டியுள்ளார். மேலும் இவர் இந்த வருடத்தின் தேசிய நல்லாசிரியர் விருதையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!