நடிகை ஆலியா மானசா தனது 2 குழந்தைகளுடன் வெளியிட்ட புகைப்படம் – ரசிகர்கள் வாழ்த்து மழை!

0
நடிகை ஆலியா மானசா தனது 2 குழந்தைகளுடன் வெளியிட்ட புகைப்படம் - ரசிகர்கள் வாழ்த்து மழை!
நடிகை ஆலியா மானசா தனது 2 குழந்தைகளுடன் வெளியிட்ட புகைப்படம் - ரசிகர்கள் வாழ்த்து மழை!
நடிகை ஆலியா மானசா தனது 2 குழந்தைகளுடன் வெளியிட்ட புகைப்படம் – ரசிகர்கள் வாழ்த்து மழை!

சின்னத்திரையில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்த நடிகை ஆலியா மானசாவிற்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில், தனது மகனை தனது மகளின் மடியில் வைத்தது போல புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

நடிகை ஆலியா மானசா:

நடிப்பு மீது உள்ள ஆர்வத்தால் பலர் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்து இருக்கின்றனர். அந்த வகையில் தனது நடன திறமையை காட்ட வந்து நடிகையானவர் தான் ஆலியா மானசா. அவர் 3 ஆண்டுகளுக்கு முன் தன்னுடன் நடித்த நடிகர் சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஐலா என்ற மகள் இருக்கிறாள். சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஜோடியாக ஆலியாவும், சஞ்சீவும் இருக்கின்றனர். மேலும் இருவரும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகின்றனர்.

Exams Daily Mobile App Download

அவர்களது தினசரி பதிவுகளை ரசிகர்கள் தொடர்ந்து ஃபாலோ செய்து வருகின்றனர். அந்த வகையில் தன்னுடைய மகன், மகள் பற்றியும் பல பதிவுகளை ஆலியா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிடுவார். அதுமட்டுமில்லாமல் அவர் தனியாக யூடுயூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் ஏகப்பட்ட வீடியோக்களை பதிவிடுவார். இந்நிலையில் தனது மகள் மடியில் குட்டி தம்பியை ஆலியாவின் கணவர் சஞ்சீவ் வைப்பது போன்ற அழகான புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது.

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் மீனா அம்மாவின் நிஜ மகள் இவர் தானா? வைரலாகும் புகைப்படம்!

தனது குழந்தைகளுடன் நேரம் செலவிட்டு வரும் ஆலியா தற்போது சீரியலில் இருந்து விலகி இருக்கிறார். இன்னும் ஒரு சில மாதங்களில் அவர் புது சீரியலில் என்ட்ரி கொடுப்பார் என அவரே விளக்கம் ஒன்றை அளித்து இருக்கிறார். இரு குழந்தைகளுக்கு தாயான பின்னர் கூட தன்னுடைய நடிப்பை விடாமல் தொடருவேன் என சொன்னதால் அவருக்கு ஏகப்பட்ட பாராட்டுகளை ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் அவர் என்ட்ரிக்காக பலர் காத்திருப்பதாக கமெண்ட் செய்து இருக்கின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!