
தமிழகத்தின் இன்று(18.12.2024) பல்வேறு சுற்றுலாத் தலங்களில் மக்கள் குளிக்க தடை..!! ” காரணம் இது தானா”..??
தமிழ்நாட்டில் பல்வேறு புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்கள் இருப்பினும், மக்களால் மிகவும் கவரப்பட்ட சுற்றுலாத்தலமாக கருதப்படுவது குற்றாலம் தான். மேலும், குற்றாலத்தில் கடந்த 1 வாரமாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அங்குள்ள அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதுமட்டுமின்றி, சிற்றாற்றில் நீண்ட வருடங்களுக்கு பிறகு நீர்வரத்து அதிகரித்து, அப்பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து, கனமழை எதிரொலியாக குற்றாலம் மெயின் அருவி மற்றும் பழைய அருவியில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், சுற்றுலா பயணிகள் இன்று(18.12.2024) குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஐந்தருவி, புலியருவி மற்றும் சிற்றருவியில் மட்டுமே சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தேனி கும்பகரையில் வெள்ளப்பெருக்கு எதிரொலியாக சுற்றுலா பயணிகள் தொடர்ந்து 6வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்புகின்றனர்.
























