இலவச பேருந்தில் சென்ற பெண் பயணிக்கு அபராதமா?? போக்குவரத்து துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
தமிழகத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற போது, பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்தை அறிமுகப்படுத்தினார். இத்திட்டம் பொதுமக்கள் உட்பட பலர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் அரசு இலவச பேருந்துகளில் பெண்கள் பயணித்தாலும், அதற்கும் டிக்கெட் உண்டு.
இந்த நிலையில் திருப்பூரில் நேற்று (அக்டோபர் 29) டிக்கெட் வாங்காமல் இலவச பேருந்தில் சென்ற பெண்ணுக்கு, ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த செய்தி ஊடகங்களில் வெளியானதை அடுத்து, டிக்கெட் பரிசோதகர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அபராதத் தொகை திருப்பித் தரப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
























