‘பாக்கியலட்சுமி’ சீரியலில் இணைந்த ‘பாவம் கணேசன்’ பிரனிகா தக்‌ஷன்யா – அவரே வெளியிட்ட பதிவு!

0
'பாக்கியலட்சுமி' சீரியலில் இணைந்த 'பாவம் கணேசன்' பிரனிகா தக்‌ஷன்யா - அவரே வெளியிட்ட பதிவு!
'பாக்கியலட்சுமி' சீரியலில் இணைந்த 'பாவம் கணேசன்' பிரனிகா தக்‌ஷன்யா - அவரே வெளியிட்ட பதிவு!
‘பாக்கியலட்சுமி’ சீரியலில் இணைந்த ‘பாவம் கணேசன்’ பிரனிகா தக்‌ஷன்யா – அவரே வெளியிட்ட பதிவு!

பாவம் கணேசன் தொடரில் நடித்து வரும் நடிகை பிரனிகா தக்‌ஷன்யா பாக்கியலட்சுமி சீரியலில் ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் அவரின் கதாபாத்திரம் குறித்து அறிந்து கொள்ள மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.

பிரனிகா தக்‌ஷன்யா:

இலட்சியத்தை அடையும் முயற்சியில் சிறு வயதிலேயே தனது கனவின் படிகளை நோக்கி முன்னேறி வரும் பலரையும் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் வெளிச்சம் இட்டு காட்டி வருகின்றனர். இதனால் இவர்களின் திறமைக்கான பலனை அடைந்து விடுகின்றனர். சமீப காலமாக மக்கள் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என்ற பாகுபாடு இல்லாமல் நட்சத்திரங்களை ரசித்தும் அவர்களுக்கு ஃபேன் பக்கங்களை உருவாக்கியும் வருகின்றனர். இதனால் பிரபலங்கள் அதிக புகழை அடைகின்றனர். அந்த வகையில், டிக் டாக் வீடியோக்கள் மூலம் மக்களிடம் பரிட்சயமானவர் நடிகை பிரனிகா தக்‌ஷன்யா.

‘மளிகை கடை, மாவு கடை, ஸ்வீட்டு கடை’ – விஜய் டிவி சீரியல்களை டேமேஜ் செய்த நெட்டிசன்கள்!

பிரனிகாவின் சொந்த ஊரான திருச்சியில் பெற்றோரின் ஆசைப்படி மருத்துவம் படித்து மருத்துவராக இருந்தார். இவருக்கு டிக் டாக் வீடியோக்கள் மூலம் குறும்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. இதனால் சென்னைக்கு வந்த இவருக்கு குறும்படங்களில் அடுத்தடுத்து பல வாய்ப்புகள் கிடைத்து வந்தது. தற்போது விஜய் டிவியின் பாவம் கணேசன் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். விஜய் டிவியில் சமீபத்தில் முடிந்த காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். மேலும், விரைவில் சினிமாவிலும் இவர் நடிப்பில் ஒரு திரைப்படம் வெளியாக உள்ளது.

‘பிக் பாஸ்’ வீட்டில் தனது மகளின் ஆசையை நிறைவேற்றிய சஞ்சீவ் – ப்ரோமோ ரிலீஸ்!

சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகை பிரனிகா தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், விஜய் டிவி பாக்யலக்ஷ்மி தொடரில் வரும் இனியா கதாபாத்திரத்துடன் பள்ளி சீருடையில் பேசுவது போல் காட்சிகள் வருகிறது. இந்த வீடியோவிற்கு பாக்யலக்ஷ்மி சீரியலில் ஒரு புதிய கதாபாத்திரத்தில் தான் நடிக்க இருப்பதாகவும், இந்த வாய்ப்பை அளித்த விஜய் டிவிக்கும், இயக்குனருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பிரனிகாவின் கதாபாத்திரம் குறித்து அறிந்து கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் இந்த வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!