‘பிக் பாஸ்’ வீட்டில் தனது மகளின் ஆசையை நிறைவேற்றிய சஞ்சீவ் – ப்ரோமோ ரிலீஸ்!

0
'பிக் பாஸ்' வீட்டில் தனது மகளின் ஆசையை நிறைவேற்றிய சஞ்சீவ் - ப்ரோமோ ரிலீஸ்!
'பிக் பாஸ்' வீட்டில் தனது மகளின் ஆசையை நிறைவேற்றிய சஞ்சீவ் - ப்ரோமோ ரிலீஸ்!
‘பிக் பாஸ்’ வீட்டில் தனது மகளின் ஆசையை நிறைவேற்றிய சஞ்சீவ் – ப்ரோமோ ரிலீஸ்!

விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியில் ப்ரீஸ் டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில் நடிகர் சஞ்சீவ் குடும்பத்தினர் கலந்து கொள்ளும் ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி:

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு தற்போது 80 நாட்கள் முடிவடைந்துள்ளது. டாப் 10 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டது முதல் அனைவரும் எதிர்பார்த்து இருப்பது ப்ரீஸ் டாஸ்க் வரும் என்று தான் கடந்த வாரம் நாமினேஷனில் ப்ரீஸ் டாஸ்கில் என் குடும்பம் வர வேண்டும் என சஞ்சீவ் சொல்லி தப்பித்தார். இந்நிலையில் இந்த வாரம் ப்ரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது. போட்டியாளர்களின் குடும்பத்தினர் வர மிகவும் உணர்ச்சிவசமாக இந்த டாஸ்க் இருக்கிறது.

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் கயல் பாப்பா பிறந்த நாள் – வைரலாகும் வீடியோ!

இன்றைய எபிசோடில் தாமரையின் மகன் மற்றும் கணவர் வரும் ப்ரோமோ வெளியாகியது. அதை பார்த்த ரசிகர்களும் மற்ற போட்டியாளர்களும் சந்தோஷத்தில் இருந்தனர். இந்நிலையில் மூன்றாவது ப்ரோமோவில் சஞ்சீவ் மனைவி மற்றும் மகள் மகன் வந்துள்ளனர். அனைவரும் ப்ரீஸ்ஸில் இருக்க, சஞ்சீவின் மகள் வந்து அவரை கட்டி அணைத்து பாசத்தை காட்டுகிறார். அப்போது உணர்ச்சி வசப்பட்ட சஞ்சீவ் கதறி அழுகிறார்.

பிக்பாஸ் வீட்டில் கணவர் பற்றி பேசாத தொகுப்பாளர் பிரியங்கா – காரணம் இது தானா?

இந்த காட்சிகள் ரசிகர்களை மிகவும் நெகிழ்ச்சி அடைய செய்தது. மேலும் சஞ்சீவ் தனது மகளை பார்த்து இப்போது நீ சந்தோசமாக இருக்கியா என கேட்க, ஆமாம் என அவர் சொல்கிறார். மகளின் ஆசையை நிறைவேற்றிய அப்பாவாக சஞ்சீவ் பெருமையாக இருக்கும் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த வாரம் முழுவதும் பிக்பாஸ் நிகழ்ச்சி பார்க்கும் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் அமீர் குடும்பம் எப்போது வருவார்கள் என பலர் எதிர்பார்த்து இருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!