விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் கயல் பாப்பா பிறந்த நாள் – வைரலாகும் வீடியோ!

0
விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் கயல் பாப்பா பிறந்த நாள் - வைரலாகும் வீடியோ!
விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் கயல் பாப்பா பிறந்த நாள் - வைரலாகும் வீடியோ!
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் கயல் பாப்பா பிறந்த நாள் – வைரலாகும் வீடியோ!

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் ஜீவா, மீனா ஜோடியின் குழந்தையான கயல் பாப்பாவின் பிறந்த நாள் கொண்டாட்டம் தொடர்பான எபிசோடுகள் வெளியாகி உள்ள நிலையில், அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கயல் பிறந்த நாள்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தொடர்ந்து 3 வருடங்களை கடந்து 4வது வருடமாக வெற்றிநடை போட்டு வருகிறது. சீரியலில் நடிக்கும் அனைவரும் நடிகர்கள் என்பதை தாண்டி ஒரு குடும்பத்தை போலவே பழகி வருகின்றனர். பல வருடங்களாக ஒன்றாக சேர்ந்து பணியாற்றி வருவதன் மூலம் இவர்கள் அனைவரும் நெருங்கிய நண்பர்களை போல் உள்ளனர். தற்போது சீரியல் மேலும் புது திருப்பங்களுடன் நகர்ந்து வருகிறது. இதனால் ரசிகர்களுக்கு சீரியல் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது. தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் சேனலின் ரேட்டிங்கை முன் வரிசையில் நிற்க உதவி வருகிறது.

பிக்பாஸ் வீட்டில் கணவர் பற்றி பேசாத தொகுப்பாளர் பிரியங்கா – காரணம் இது தானா?

சீரியலின் தொடக்கத்தில் தனம் மூர்த்தி ஜோடியினருக்கு மட்டுமே பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் திருமணம் நடந்திருந்தது. ஆனால் தற்போது தம்பிகள் 3 பேருக்கும் திருமணம் முடிந்து ஜீவா – மீனா, கதிர் – முல்லை, கண்ணன் – ஐஸ்வர்யா என்று 3 ஜோடிகளும் சேர்ந்துள்ளனர். இவர்கள் அனைவரையும் சுற்றியே தான் கதை கொண்டு செல்லப்படுகிறது. இதனால் தமிழகத்தின் குடும்ப ரசிகர்கள் அனைவரையும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தன் பக்கம் இழுத்துள்ளது. இந்த வாரம் ஜீவா, மீனா ஜோடியின் குழந்தை கயல் பாப்பா பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பான எபிசோடுகள் தான் ஒளிபரப்பாகி வருகிறது.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நடிகர் விஜய்யுடன் நேரில் சந்திப்பு – வைரலாகும் புகைப்படம்!

அதில் மீனாவின் அப்பா, அம்மா மூலம் எங்கே சண்டை வந்து விடுமோ என்று பதறும் வகையில் தான் காட்சிகளில் அவர்கள் வம்பிழுத்து வந்தனர். ஆனால் மீனா சற்று பொறுமையாக இருந்ததால் சண்டை தவிர்க்கப்பட்டது. கயலுக்கு முதல் பிறந்த நாள் என்பதால் அதை விமரிசையாக கொண்டாட அனைவரும் முடிவு செய்து ஏற்பாடு செய்து வருகின்றனர். அப்போ கேக் வெட்டுவதற்காக கயலை தனமும், முல்லையும் ரெடியாக்கி கூட்டி வருகின்றனர். அப்போது கயல் அழகாக தத்தி தத்தி நடந்து வருகிறாள். இந்த காட்சிகள் சீரியலிலும் மிகுந்த வரவேற்பை பெற்றது. தற்போது சமூக வலைத்தளங்களிலும் இந்த வீடியோ வெளியாகி உள்ளது. அதனை பார்த்த ரசிகர்கள் கயல் பாப்பா உண்மையிலேயே வளர்ந்து விட்டதாக கூறி தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!