கொரோனா பரவல் அதிகரித்தால் பகுதிநேர ஊரடங்கு – துணை நிலை ஆளுநர் எச்சரிக்கை!!

0
கொரோனா பரவல் அதிகரித்தால் பகுதிநேர ஊரடங்கு - துணை நிலை ஆளுநர் எச்சரிக்கை!!
கொரோனா பரவல் அதிகரித்தால் பகுதிநேர ஊரடங்கு - துணை நிலை ஆளுநர் எச்சரிக்கை!!
கொரோனா பரவல் அதிகரித்தால் பகுதிநேர ஊரடங்கு – துணை நிலை ஆளுநர் எச்சரிக்கை!!

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்தால் பகுதி நேர ஊரடங்கு அறிவிக்கப்படும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பகுதிநேர ஊரடங்கு

புதுச்சேரியில் நடமாடும் கொரோனா தடுப்பு வாகன சேவையை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் துவங்கி வைத்தார். இந்த விழா புதுச்சேரி ஆளுநர் மாளிகை முன்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் புதுச்சேரியில் கொரோனா பரவல் அதிகரித்தால் பகுதிநேர ஊரடங்கு அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் , ‘விவசாயிகளுக்கான ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், 100 பேருக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றும் தொழிற்சாலைகளுக்கு இந்த வாகனம் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்த நடைமுறைக்கு மக்கள் நல்ல வரவேற்பு கொடுப்பார்கள் என நம்புகிறேன்’ என தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவதால் பொது மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும். மக்கள் கூடும் இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்திய நிறுவனங்களில் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – ஆய்வில் தகவல்!!

மற்ற மாநிலங்களில் நடைமுறையில் இருக்கும் பொது முடக்கத்தை போல மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் புதுச்சேரியில் முழு ஊரடங்கு அறிவிக்கப்படாது. இருந்தாலும் கொரோனா பரவல் அதிகமாவது தெரிந்தால் பகுதி நேர ஊரடங்கு அறிவிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார். மேலும் மக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டும், அவ்வாறு செய்தால் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது எனவும் அவர் கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here