இந்திய நிறுவனங்களில் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – ஆய்வில் தகவல்!!

0
இந்திய நிறுவனங்களில் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு - ஆய்வில் தகவல்!!
இந்திய நிறுவனங்களில் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு - ஆய்வில் தகவல்!!
இந்திய நிறுவனங்களில் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – ஆய்வில் தகவல் !

இந்திய நிறுவங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கான சம்பள உயர்வு குறித்து எடுக்கப்பட்ட ஆய்வில் 59 சதவீத நிறுவனங்கள் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளது.

சம்பள உயர்வு

உலகமெங்கிலும் பேரிடியாக உருவான கொரோனா நோய்த்தொற்று காரணமாக இந்திய பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்தித்து வந்தது. இதனால் பல்வேறு துறைகளில் பணி புரிந்து வந்த ஊழியர்கள் தங்களது வேலைகளை இழந்தனர். சம்பள உயர்வையும் இழந்தனர். பலரது குடும்பம் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா பரவல் குறைந்து வந்ததை தொடர்ந்து இந்திய பொருளாதாரம் சற்று மீண்டு வர துவங்கியது.

TN Job “FB  Group” Join Now

இப்படி இருக்க தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் மீண்டுமாக அதிகரித்து வருகிறது. இந்தியா முழுவதும் ஒரு நாள் பாதிப்பு மட்டும் 2 லட்சத்துக்கும் மேலாக அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் ஒரு நாள் பாதிப்பு 8000 வரை உள்ளது. இந்த இக்கட்டான சூழலிலும் இந்திய நிறுவனங்கள் பல தங்கள் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க விருப்பமுள்ளதாக தெரிவித்துள்ளது.

தாஜ்மஹால் மே 15 ஆம் தேதி வரை மூடல் – அரசு உத்தரவு!!

இதுகுறித்து Staffing company Genius Consultants நிறுவனம் நடத்திய ஆய்வில் பல நிறுவனங்கள், ஊழியர்களுக்கு 5 முதல் 10 சதவீதம் வரை சம்பள உயர்வு கொடுக்க முன்வந்துள்ளது. இந்த ஆய்வானது இந்தியாவிலுள்ள 1,200 நிறுவனங்களிடம் நடத்தப்பட்டது. இதில் 59% நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கான சம்பளத்தை உயர்த்த விரும்புவதாக தெரிவித்துள்ளது. தொடர்ந்து 20% நிறுவனங்கள் 5 சதவீதத்துக்கும் குறைவாக சம்பளத்தை உயர்த்தப்போவதாகவும், 21% நிறுவனங்கள் சம்பளத்தை உயர்த்தப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here