முல்லையை பார்த்து வருத்தப்படும் கதிர், சீக்கரம் டிரீட்மென்ட் தொடங்க சொல்லும் மூர்த்தி – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

0
முல்லையை பார்த்து வருத்தப்படும் கதிர், சீக்கரம் டிரீட்மென்ட் தொடங்க சொல்லும் மூர்த்தி - இன்றைய
முல்லையை பார்த்து வருத்தப்படும் கதிர், சீக்கரம் டிரீட்மென்ட் தொடங்க சொல்லும் மூர்த்தி - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!
முல்லையை பார்த்து வருத்தப்படும் கதிர், சீக்கரம் டிரீட்மென்ட் தொடங்க சொல்லும் மூர்த்தி – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், முல்லையை நினைத்து கதிர் மிகவும் வருத்தப்படுகிறார். முல்லையிடம் எப்படி பேசுவது என என்னால் தெரியவில்லை என சொல்கிறார். அடுத்து ஐஸ்வர்யா மீனாவும் முல்லையை சிரிக்க வைத்து கஷ்டத்தை மறக்க வைக்கின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், முல்லை எவ்வளவு சொல்லியும் கேட்காமல் இப்படி இருக்கிறாள் என நினைத்து கதிர் வருத்தப்படுகிறார். கண்ணாடி போல முல்லையிடம் பேச வேண்டி இருக்கிறது. எவ்வளவு பேசியும் அவள் மிகவும் கஷ்டப்படுகிறாள் என கதிர் ஜீவாவிடம் சொல்லி வருத்தப்படுகிறார். ஜீவா முல்லைக்கு உண்மை தெரிந்தது எல்லாம் நல்லது தான் என சொல்ல, கதிர் வருத்தப்படுவதை பார்த்து ஜீவா எதுவும் ஆகாது எல்லாம் சரியாகிவிடும் என சொல்கிறார். இது போய் முன்னால் வருத்தப்பட்டோம் என ஒரு நாள் யோசிப்பீங்க என சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

பின் முல்லையை பார்க்க ஐஸ்வர்யா மீனா, தனம் வருகிறார். அப்போது ஐஸ்வர்யா நான் உங்களை தைரியமான ஆளாக நினைத்தேன் ஆனால் இப்படி இருக்காங்க என கேட்கிறார். அப்போது மீனா இப்போதும் முல்லை தைரியமாக தான் இருக்கிறார். இவ்வளவு வெய்யிலில் எப்படி அவர்கள் நடந்திருக்கிறார் உன்னால் முடியுமா என கேட்கிறார். பின் தனம் இப்படி எல்லாம் கஷ்டப்பட வேண்டுமா என கேட்க, ஐஸ்வர்யா அதான் மருத்துவமனைக்கு போகலாம் என சொல்லிருக்கு மாமா உடன் ஐஸ் சாப்பிட்டோமா, குழி பணியாரம் சாப்பிட்டோமா என விடாமல் இப்படி பண்றீங்க என கேட்கிறார்.

பாரதியை சந்தித்து கதறி அழுத வெண்பா, திருமண வாழ்க்கை பற்றி புரிய வைக்கும் வேணு – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

அப்போது மீனா என்ன அது என கேட்க அக்காவும் மாமாவும் இரவு அப்படி தான் வெளியே போறாங்க என சொல்கிறார். பின் மீனா இப்படி இருந்தால் எப்படி குழந்தை பிறக்கும் என கேட்கிறார். பின் தனம் உனக்கு கடவுள் நம்பிக்கை இருந்தால் சாமி கும்பிடு ஆனால் இப்படி எல்லாம் செய்யாதே நாங்க மருத்துவம் பார்க்க மாட்டோம் என உனக்கு நம்பிக்கை இல்லையா என கேட்கிறார்.அப்படி எல்லாம் இல்லை என முல்லை சொல்கிறார். பின் ஐஸ்வர்யா குழந்தை பிறக்காமல் இருந்தால் இவ்வளவு கஷ்டம் இருக்குமா என கேட்கிறார். பின் மீனா குழந்தை பிறக்காமல் இருந்தால் முல்லை மாதிரி இருக்க வேண்டும் பிறந்தால் என்னை போல இருக்க வேண்டும் என சொல்கிறார்.

பின் கதிர் ரூமிற்குள் வர முல்லை எனக்கு ஒன்றுமில்லை என சொல்கிறார். கதிர் தொட்டு பார்க்க முல்லைக்கு காய்ச்சல் அடிக்கிறது. எதுக்கு முல்லை இதெல்லாம் என கேட்க முல்லை அதெல்லாம் ஒன்றுமில்லை என சொல்கிறார். கொஞ்சமாக தான் வலிக்கிறது என முல்லை சொல்ல, நாளைக்கு சரியாகிவிடும் என சொல்கிறார். பின் கதிர் முட்டி போட்டு நடப்பது எல்லாம் எவ்வளவு கஷ்டம் என கேட்க அங்கே நிறைய பெண்கள் இருந்தார்கள் அவங்க புருஷன் எல்லாம் இப்படியா இருந்தார்களா என முல்லை கேட்க கதிர் அவர்களை போல என்னால் இருக்க முடியாது என கதிர் சொல்கிறார்.

குழந்தை இல்லை என்றால் என்ன என கதிர் கேட்க அப்படி எல்லாம் சொல்லாதீங்க குழந்தை முக்கியம் என முல்லை சொல்கிறார். பின் முல்லை வலியால் இருக்க கதிர் பார்த்து வருத்தப்படுகிறார். காலில் சிவந்து இருக்க கதிர் மருந்து போடுகிறார். பின் தண்ணீர் வைத்து ஒத்தடம் கொடுக்கிறார். பின் தனம் எதையோ யோசித்து கொண்டு வர மூர்த்தி என்ன ஆனது என கேட்கிறார். முல்லை பற்றி தான் கவலையாக இருக்கிறது என்னை பார்த்து கேட்டது போல இப்போது முல்லை பற்றி கேட்கிறார்கள். பணம் இப்போது இல்லை ஆனால் முல்லையை சீக்கரம் மருத்துவமனைக்கு கூட்டிக் கொண்டு செல்ல வேண்டும் என சொல்கிறார்.

மதுரை, சிவகங்கை உட்பட 10 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை மையம் எச்சரிக்கை!

மூர்த்தி அமர்ந்திருக்க மீனா கயலுடன் விளையாடி கொண்டிருக்கிறார். அப்போது ஜீவா, கண்ணன் வர கதிரும் வருகிறார். காய்ச்சல் எப்படி இருக்கிறது என கேட்க இப்போது பரவாயில்லை ஆனால் அவளைஇப்படி பார்க்க முடியவில்லை என சொல்கிறார். ஐஸ்வர்யா ஆமாம் அக்காவை இப்படி பார்த்ததே இல்லை என சொல்கிறார். பின் மூர்த்தி ஜீவாவிடம் மருத்துவமனைக்கு சென்று எத்தனை நாள் ஆகி இருக்கிறது என கேட்கிறார். அப்போது 2 வாரங்கள் இருக்கும் என சொல்ல, இத்தனை நாள் ஆனதுனால தான் இப்படி கஷ்டமாக இருக்கிறது முல்லைக்கு சீக்கரம் டிரீட்மென்ட் தொடங்க வேண்டும் என மூர்த்தி சொல்ல அதை கேட்டு மீனா அதிர்ச்சி அடைகிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!