
முல்லையின் சிகிச்சைக்காக பணம் ஏற்பாடு செய்யும் ஜீவா – நன்றி கூறும் முல்லை! புதிய திருப்பங்களுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ்!
முல்லைக்கு செயற்கை முறை சிகிச்சைக்கு எப்படி பணம் ரெடி செய்வது என விழித்துக் கொண்டிருந்த சமயத்தில், கதிர் அவருடைய நண்பனிடம் இருந்து 5 லட்ச ரூபாய் கடன் வாங்கி முல்லைக்கு உதவும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. முல்லையால் இயற்கையாக குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என்பதால் செயற்கை முறையில் வேண்டுமானால் சிகிச்சை பெற்று குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என மருத்துவர் கூறுகிறார். ஆனால் செயற்கை முறை கருவுறுதலுக்கு குறைந்தது 5 லட்சம் செலவாகும் எனவும் மருத்துவர் கூறுகிறார். அவ்வளவு பணத்திற்கு என்ன செய்வதென்று குடும்பத்தினர்கள் யோசித்து கொண்டிருக்கின்றனர்.
நடிகையாக மாறும் விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா – நடிகர் இவரா? ரசிகர்கள் உற்சாகம்!
அப்போது மூர்த்தி நமக்கு இப்போது குழந்தை தான் முக்கியம். முல்லை கஷ்டப்படுவதை பார்த்து கொண்டு சும்மா இருக்க முடியாது. இதனால், தற்போதைக்கு வீடு கட்டும் பிளானை நிறுத்தி வைக்கலாம் என மூர்த்தி கூறி விடுகிறார். வீடு கட்டுவதை நிறுத்தலாம் என மூர்த்தி கூறியதும் அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர். பின்னர் எப்படியோ முல்லைக்காக ஒப்பு கொள்கின்றனர். ஆனால், மீனா அனைவருக்கும் சொந்தமான இந்த வீட்டை நான் ஏன் முல்லைக்காக நிறுத்தி வைக்க வேண்டும் எனக்கூறி சண்டை போடுகிறார். இதற்கு மேலும் செயற்கை முறையில் சிகிச்சை எடுப்பார்களா என ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில், கதிர் அவருடைய நண்பனிடம் இருந்து 5 லட்சம் வாங்கி கொண்டு வந்து முல்லையிடம் கொடுப்பார். எனக்கு இந்த குடும்பத்தின் நிம்மதி தான் முக்கியம் என கூறுகிறார். இதற்கு பிறகு முல்லைக்கு செயற்கை முறையில் சிகிச்சை தொடங்குகிறது. முல்லையும் கர்ப்பமாகுகிறார். தற்போது பிரசவத்திற்காக முல்லையை மருத்துவமனையில் சேர்த்திருப்பது போலவும், கதிருக்கு முல்லை நன்றி கூறுவது போலவும் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.