‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ வீட்டில் கயல் பாப்பா பிறந்தநாள் கொண்டாட்டம் ஆரம்பம் – ரசிகர்கள் உற்சாகம்!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' வீட்டில் கயல் பாப்பா பிறந்தநாள் கொண்டாட்டம் ஆரம்பம் - ரசிகர்கள் உற்சாகம்!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' வீட்டில் கயல் பாப்பா பிறந்தநாள் கொண்டாட்டம் ஆரம்பம் - ரசிகர்கள் உற்சாகம்!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ வீட்டில் கயல் பாப்பா பிறந்தநாள் கொண்டாட்டம் ஆரம்பம் – ரசிகர்கள் உற்சாகம்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் உள்ள நடிகர், நடிகைகள் அனைவரும் சீரியலில் வரும் கயல் பாப்பா பிறந்த நாள் விழாவிற்கு தயாராகி உள்ளது போன்ற புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த பதிவுகள் அனைத்தும் தற்போது வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தற்போது அதிரடியான பல காட்சிகள் நடந்து வருகின்றது. கண்ணன் தனியாக இருப்பதால் அவனுக்காக அடுத்தடுத்து பல பிரச்சனைகள் வருகிறது. இதனால் கண்ணனுக்கு வரும் ஒவ்வொரு பிரச்சனையையும் கதிர் மற்றும் ஜீவா தான் சமாளிக்கின்றனர். அந்த வகையில், கண்ணன் தற்போது அடிபட்டு இருப்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல் தனம், கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரையும் இனி தங்கள் வீட்டிலேயே தங்க வைக்க அழைத்து வருகிறார். ஏற்கனவே கண்ணன் மீது கோவத்தில் இருக்கும் மூர்த்தி இதனால் மேலும் கோவமடைகிறார்.

‘செம்பருத்தி’ ஷபானாவின் கணவர் ‘பாக்கியலட்சுமி’ செழியனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!

எனவே வீட்டில் இருந்து சட்டென்று வெளியில் சென்று விடுகிறார். இதனால் கண்ணன் வேணாம் அண்ணி அண்ணன் கோவப்படுவாரு, நாங்க அங்கேயே இருந்துக்குறோம் என்று சொல்கிறான். ஆனால் தனம் அதெல்லாம் முடியாது, இனி நீ இங்க தான் எங்க கூட இருக்கணும் என்று சொல்லி விடுகிறார். இந்நிலையில், ஜீவா மற்றும் மீனாவின் குழந்தையான கயல் பாப்பாவின் பிறந்த நாள் வர இருப்பது பற்றி பல நாட்களாக பேச்சு அடிபட்டு வருகிறது. தனம் பாப்பாக்கு முதல் பிறந்தநாள் என்பதால் சிறப்பாக செய்ய நினைக்கிறார். மீனாவும் நல்ல கிராண்டா கொண்டாடணும்ன்னு ஆசை படுறாங்க.

பாரதி கண்ணம்மாவில் இருந்து ரோஷினி விலகியதன் உண்மை காரணம் இதுதான் – மனம் திறந்த இயக்குனர்!

ஆனா வழக்கம் போல் ஜீவா அதெல்லாம் ஒன்னும் வேணாம். இப்போ தான் அம்மா தவறி இருக்காங்க. சிம்பிளா செய்ஞ்சா போதும்னு சொல்கிறார். இதனால் மீனா ஜீவா மீது கோவப்படுகிறார். இப்படி இருக்கையில், மீனவாக நடிக்கும் ஹேமா மற்றும் ஐஸ்வர்யா ஆக நடிக்கும் சாய் காயத்ரி இருவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விழாவிற்கு ரெடி ஆகி இருப்பது போல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். அதில், Function Mood என்று குறிப்பிட்டுள்ளனர். இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கயல் பாப்பாவின் பிறந்த நாள் விழா தொடர்பான காட்சிகள் படம்பிடிக்கப்பட்டு வருவது உறுதியாகிறது. இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!