விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” இயக்குனரிடம் சண்டை போடும் மீனா ஹேமா – ரசிகர்கள் ஷாக்!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பாண்டியன் ஸ்டோர்ஸ்" இயக்குனரிடம் சண்டை போடும் மீனா ஹேமா - ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” இயக்குனரிடம் சண்டை போடும் மீனா ஹேமா – ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹேமா சதீஸ் படப்பிடிப்பு தலத்தில் அவருடைய அசிஸ்டென்ட் இயக்குனரிடம் சண்டையிட்டு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் அண்ணன் தம்பிகளின் பாசத்தை மையமாக கொண்டு கதையுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ஹேமா சதீஸ். அவர் அந்த சீரியலில் வீட்டில் இரண்டாவது மருமகளாக இருந்தாலும் ஒரு நகைச்சுவை வில்லியாக காட்டப்படுகிறார். குடும்பத்தில் பல சண்டைகளுக்கு அவர் காரணமாக இருந்தாலும் கடைசில் குடும்பத்திற்கு பிரச்சனை என்று வந்தால் அவர் தான் முக்கிய இடத்தில் இருக்கிறார்.

குக் வித் கோமாளி சீசன் 3ல் வைல்ட் கார்டு என்ட்ரியாக அஸ்வின் பட நடிகை – உண்மையா? புரளியா?

இந்நிலையில் ஹேமா நடிப்பை தவிர தனியாக யூடுப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் தன்னுடைய டெய்லி வேலைகளை பற்றியும், படபிடிப்பு தலத்தில் நடக்கும் சிறந்த தருணங்கள் பற்றியும் வீடியோவாக பதிவிடுவார். அந்த வகையில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் படப்பிடிப்பின் போது நடந்த சம்பவம் குறித்து வீடியோவாக பதிவிட்டு இருக்கிறார். அதில் அசிஸ்டென்ட் இயக்குனரிடம் சண்டை என சொல்லி நகைச்சுவையாக வீடியோ பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது ஹேமா ரசிகர்களால் அதிகம் லைக் செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஹேமாவின் யூடுப் சேனலில் ஏகப்பட்ட சப்ஸ்கிரைபர்ஸ் இருக்கும் நிலையில் அவர்கள் மத்தியில் இந்த வீடியோ அதிகம் பேசப்பட்டு வருகிறது. மேலும் சீரியலில் ஜீவா மீனாவின் அப்பா கடையை கவனித்து கொள்வதால் அவருக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையில் சரியாக மரியாதை இல்லாமல் இருக்கிறது. அதனால் அண்ணன் தம்பிகளுக்கு இடையே விரிசல் விழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!