Home Entertainment குக் வித் கோமாளி சீசன் 3ல் வைல்ட் கார்டு என்ட்ரியாக அஸ்வின் பட நடிகை – உண்மையா? புரளியா?

குக் வித் கோமாளி சீசன் 3ல் வைல்ட் கார்டு என்ட்ரியாக அஸ்வின் பட நடிகை – உண்மையா? புரளியா?

0
குக் வித் கோமாளி சீசன் 3ல் வைல்ட் கார்டு என்ட்ரியாக அஸ்வின் பட நடிகை – உண்மையா? புரளியா?
குக்கு வித் கோமாளி சீசன் 3ல் வைல்ட் கார்டு என்ட்ரியாக அஸ்வின் பட நடிகை - உண்மையா? புரளியா?
குக் வித் கோமாளி சீசன் 3ல் வைல்ட் கார்டு என்ட்ரியாக அஸ்வின் பட நடிகை – உண்மையா? புரளியா?

ரசிகர் பட்டாளத்தை குவித்து வைத்திருக்கும் குக்கு வித் கோமாளி பொழுதுபோக்கு ஷோ சீசன் 1, 2 அதிக வரவேற்பை பெற்று வந்த நிலையில் தற்போது ஆரம்பமாகிய சீசன் 3 ல் மக்கள் அறிந்த நட்சத்திரங்கள் குக்குள்ளாக கலந்துகொண்டனர். அதை தொடர்ந்து தற்போது வைல்ட் கார்டு என்ட்ரியாக அஸ்வின் பட நடிகை வரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

வைல்ட் கார்டு என்ட்ரி:

விஜய் டிவி யில் ஒவ்வொரு வார சனி மற்றும் ஞாயிறுக்கிழமைகளில் ஒளிபரப்பாகி வரும் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியை தெரியாதவர்களே இல்லை. அந்த அளவிற்கு சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை விரும்பி பார்த்து வருகின்றனர். சமீபகாலத்தில் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியை பார்த்துதான் படுத்த படுக்கையாக இருந்த என் அம்மா உயிர் பிழைத்து சுகமாகியுள்ளார் என்று வெளியாகிய ஒரு தகவல் அனைவர் மனதையும் சிலிர்க்க வைத்தது.

கோபி விவாகரத்து செய்யப் போவது தெரியாமல் சந்தோசமாக இருக்கும் பாக்கியா – வைரலாகும் வீடியோ!

இவ்வாறு சீசன் 1 வெற்றி பாதையில் பயணித்தது போலவே சீசன் 2 ம் அதிக அளவில் ரீச் கொடுத்து முடிவுக்கு வந்தது. அதை தொடர்ந்து சீசன் 3 ஆரம்பமானதில் குஷியாகிய ரசிகர்கள் யார் அந்த 10 குக்குகள் என்ற ஆர்வத்தில் துடித்து வந்தார்கள். இவ்வாறு பல எதிர்பார்ப்புகளுடன் தொடங்கிய குக்கு வித் கோமாளி சீசன் 3 தொடக்கத்தில் சில எதிர்ப்புகளை பெற்று வந்தது. ஆனாலும் அதை முறியடிக்கும் வகையில் புகழ், பாலா மற்றும் சிவாங்கி ஒரு கலக்கு கலக்கி வருகிறார்கள்.

ஒரு நிகழ்ச்சி என்றாலே எலிமினேஷன் மற்றும் வைல்ட் கார்டு என்ட்ரி இருப்பது வழக்கம். அந்த வகையில் ஒரு சில குக்குகள் எலிமினேட் ஆகியுள்ளனர் மற்றும் கடந்த சீசன் 2 ல் நடிகை ரித்திகா வைல்ட் கார்டு என்ட்ரி கொடுத்தது போலவே இந்த சீசனில் அஸ்வினுடன் ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தில் நடித்த வளர்ந்து வரும் நடிகை தேஜு அஸ்வினி வரப்போவதாக சொல்லப்பட்டது. இது குறித்து அவரிடம் இன்ஸ்டா பக்கத்தில் கேள்வி விடை பெட்டியில் ரசிகர்கள் கேட்ட போது அதற்க்கு ‘நைஸ்’ , சத்தியமா இல்லை மேலும், எனக்கு கொஞ்சம் கூட சமைக்க தெரியாது என்று பதில் கூறியுள்ளார்.

TNPSC Online Classes

[table id=1078 /]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here