பாண்டியன் ஸ்டோர்ஸ்க்கு போட்டியாக களமிறங்கும் புதிய சீரியல் – நடிகர் & நடிகையர் லிஸ்ட்!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ்க்கு போட்டியாக களமிறங்கும் புதிய சீரியல் - நடிகர் & நடிகையர் லிஸ்ட்!
பாண்டியன் ஸ்டோர்ஸ்க்கு போட்டியாக களமிறங்கும் புதிய சீரியல் - நடிகர் & நடிகையர் லிஸ்ட்!
பாண்டியன் ஸ்டோர்ஸ்க்கு போட்டியாக களமிறங்கும் புதிய சீரியல் – நடிகர் & நடிகையர் லிஸ்ட்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் இயக்குனர் தற்போது ஒரு புதிய சீரியலை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில் நடிக்க இருக்கும் நடிகர் மற்றும் நடிகைகளின் விவரம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

புதிய சீரியல்:

விஜய் டிவியில் தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் இருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் ரொமான்ஸ், செண்டிமெண்ட், கூட்டு குடும்பத்து சந்தோசங்கள் மற்றும் சச்சரவுகள் என்று அனைத்தும் தெளிவாகவும் அதே சமயம் யதார்த்தமாகவும் எடுத்து கட்டப்பட்டு வருகிறது. இந்த சீரியலை இயக்குனர் சிவசேகர் இயக்கி வருகிறார். தமிழில் மட்டுமின்றி மற்ற இந்திய மொழிகளிலும் இந்த சீரியல் ரீமேக் செய்யப்பட்டு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் இயக்குனர் சிவசேகர் இயக்க இருக்கும் அடுத்த சீரியல் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

“பாக்கியலட்சுமி” சீரியல் இனியாவிற்கு திடீர் திருமணம்? அவரே வெளியிட்ட இன்ஸ்டா பதிவு!

தற்போது புதிதாக வரும் நவம்பர் மாதம் முதல் ‘முத்தழகு’ என்ற சீரியல் ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் மீண்டும் ஒரு சீரியல் ஒளிபரப்பாக இருப்பது பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த சீரியலில் நாயகனாக நடிகர் ப்ரஜின் நடிக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது. நடிகர் ப்ரஜின் அன்புடன் குஷி, சின்னத்தம்பி போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடன் இந்த சீரியலில் நாயகியாக நடிகை சரண்யா நடிக்க இருக்கிறார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஆயுத எழுத்து, நெஞ்சம் மறப்பதில்லை ஆகிய சீரியல்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாகசைதன்யாவுடன் எடுத்துக் கொண்ட போட்டோக்களை டெலீட் செய்த சமந்தா – ரசிகர்கள் ஷாக்!

புதிதாக இணைய இருக்கும் இந்த ஜோடி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் பழம்பெரும் நடிகை லதா நடிக்க இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே சிவா மனசுல சக்தி மற்றும் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் போன்ற சீரியல்களிலும் நடித்து இருக்கிறார். வெகு நாட்களுக்கு பிறகு மீண்டும் அவர் சீரியலில் நடிக்க இருப்பது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியினை ஏற்படுத்தி உள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் வித்தியாசமான கதைக்களம் போன்றே இந்த புதிய சீரியலை இயக்குனர் சிவசேகர் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!