பொதுமக்கள் கவனத்திற்கு.. பழனி முருகன் கோவிலில் கட்டண தரிசனம் ரத்து.. அமைச்சர் அறிவித்த முக்கிய தகவல்..!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், நடப்பாண்டிற்கான உத்திர திருவிழா தேரோட்டம் வரும் ஏப்ரல் 11ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் கடந்த 5ஆம் தேதி பழனி தண்டாயுதபாணி சாமி கோயிலில் இவ்விழாக்கான கொடியேற்றம் கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருவிழா வழக்கமாக 10 நாட்களுக்கு நடத்தப்படுவதால் ஒவ்வொரு நாளும் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் மேற்கொள்வார்கள்.
IOCL ஆணையத்தில் Revenue Assistant வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!
இந்நிலையில், “தமிழக சட்டப்பேரவை அமர்வில் பேசிய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் 3 நாட்களுக்கு கட்டண தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார். அதன்படி ஏப்ரல் 11, 12, 13 ஆகிய நாட்களுக்கு பழனி முருகன் கோவிலில் கட்டண தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது”.


























