
ஜம்மு-காஷ்மீரில் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதல்.. 13 பேர் உயிரிழப்பு என வெளியுறவுத் துறை தகவல்..!!
பாகிஸ்தானிலிருந்து செயல்படக் கூடிய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கீழ் இயங்கும் தி ரெஸிஸ்டெண்ட் ஃப்ரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீரில் உள்ள பகல்காம் பகுதியில் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று (07-05-2025) பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் “ஆபரேஷன் சிந்தூர்” தாக்குதல் நடத்தியது.
இதை தொடர்ந்து, “ஜம்மு-காஷ்மீர் எல்லையோர கிராமம் ஆன பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் படையினர் பீரங்கிகள் மற்றும் மோட்டார் குண்டுகள் மூலம் அத்துமீறி கடும் தாக்குதல் தொடுத்துள்ளனர். இடைவிடாமல் நீடித்த இத்தாக்குதலில் 4 குழந்தைகள் உட்பட பொதுமக்கள் 12 பேரும் ராணுவ வீரர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர் என்றும், 59 பேர் காயமடைந்து இருப்பதாகவும் வெளியுறவு துறை தகவல் தெரிவித்துள்ளது”. மேலும், இன்று (08-05-2025) ஜம்முவில் உள்ள குப்வாரா, பாரமுல்லா, உரி மற்றும் அக்னூர் எதிரே உள்ள பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது.

























