நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு செல்கிறது மசோதா..!! வாக்கெடுப்பில் முடிவு..!!
இந்தியா முழுவதும் எதிர்பார்த்த “ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா” இன்று மதியம் 12 மணியளவில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இம்மசோதாவிற்கு பல்வேறு கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன் பின் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா “ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா” நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்படும் என தெரிவித்தார்.
அதன் பிறகு, காங்கிரஸ் மற்றும் திமுக போன்ற கட்சிகளின் வலியுறுத்தலை தொடர்ந்து, “ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழு பரிசீலனைக்கு அனுப்புவது தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இவ்வாக்கெடுப்பில் மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்ப 220 பேர் ஆதரவு தெரிவித்த நிலையில் , இம்மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது.


























