IND vs ENG 2nd ODI மீண்டும் தொடரை வென்றது இந்தியா.. ஃபார்முக்கு திரும்பிய ரோஹித் சர்மா..
இந்திய மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் ஒருநாள் போட்டி கடந்த வியாழக்கிழமை (06-02-2025) நாக்பூரில் நடந்தது. இப்போட்டியில் இங்கிலாந்து அணி 47.4 ஓவர்களில் 248 ரன்கள் குவித்த நிலையில் இந்திய அணி தனது சிறப்பான பேட்டிங் மற்றும் பவுலிங் செயல்திறன் மூலம் 249 ரன்கள் குவித்து முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்திய மற்றும் இங்கிலாந்திற்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி குறித்து தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
அதாவது, “நேற்று (09-02-2025) ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள பராபதி மைதானத்தில் இந்திய மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் 305 ரன்கள் குவித்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி மீண்டும் வெற்றி பெற்றது. மேலும், இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என முன்னிலை பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றியது. இப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 119 ரன்கள் குவித்துள்ளார்” என்பது குறிப்பிடத்தக்கது.
























