ODI World Cup 2027:
12 இடங்களில் உலகக் கோப்பை போட்டி – ICC அறிவிப்பு!
ODI World Cup 2027: 2027-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக் கோப்பை (ICC Men’s Cricket World Cup) தொடருக்கான 12 போட்டி மைதானங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
3 நாடுகள் இணைந்து நடத்தும் உலகக் கோப்பை
2027 உலகக் கோப்பையை தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. 2003-க்கு பிறகு, உலகக் கோப்பை தொடர் மீண்டும் ஆப்பிரிக்காவில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
12 மைதானங்களில் போட்டிகள்
ICC அறிவிப்பின்படி, போட்டிகள் மொத்தம் 12 மைதானங்களில் நடைபெற உள்ளன. இதில் தென்னாப்பிரிக்காவில் 8, ஜிம்பாப்வேவில் 3, நமீபியாவில் 1 மைதானம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த தொடரில் 14 அணிகள் பங்கேற்க உள்ளன.
ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு
உலகக் கோப்பை போட்டிக்கான மைதானங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால், உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. போட்டி அட்டவணை மற்றும் டிக்கெட் தொடர்பான விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் என ICC தெரிவித்துள்ளது.



























