முதுகலை நீட் தேர்வு 2021 எப்போது? என்.டி.ஏ விளக்கம்!
2021ம் ஆண்டுக்கான முதுகலை நீட் தேர்வுகள் குறித்து சமூக வலைத்தளங்களில் பல போலி தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், விரைவில் ஆலோசிக்கப்பட்டு தேர்வு பற்றிய தேதிகள் அறிவிக்கப்படும் என்று தேசிய தேர்வுகள் ஆணையம் அறிவித்துள்ளது.
முதுகலை நீட் தேர்வு:
கொரோனா தொற்றின் இரண்டாம் அலை நாடு முழுவதும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துவதால், பல முக்கிய தேர்வுகளான ஜேஇஇ, முதுகலை நீட் போன்றவை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும், பல மாநிலங்களின் பல்கலைக்கழக, கல்லூரி தேர்வுகள், பள்ளி பொதுத்தேர்வுகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய கல்வி அமைச்சகம் இரு தினங்களுக்கு முன்னர், JEE (முதன்மை) ஏப்ரல் மற்றும் மே மாத அமர்வுகளுக்கான புதிய தேதிகளை வெளியிட்டது.
EPF அக்கவுண்ட்டில் இருந்து பணம் எடுப்பது எப்படி? முழு விவரம் இதோ!
முன்னர் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க முடியாத வேட்பாளர்கள் புதிதாக விண்ணப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முதுகலை நீட் தேர்வுகள் செப்டம்பர் 5ம் தேதி நடக்க இருப்பதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வருகிறது. இது முற்றிலும் போலியானது என்று என்.டி.ஏ நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.
TN Job “FB
Group” Join Now
இது போன்ற போலியான அறிவிப்புகளினால் ஆர்வமுள்ள மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்களை தவறாக வழிநடத்தும் முயற்சிகள் நடக்கலாம். 2021 முதுகலை நீட் தேர்வுகளை நடத்துவதற்கு சரியான தேதியை என்.டி.ஏ அதன் அதிகாரிகளுடன் ஆலோசித்து வருகின்றனர். கோவிட் -19 தொற்றுநோய் நிலைமையை பொறுத்து அதிகாரபூர்வ அறிவிப்பு nta.ac.in மற்றும் ntaneet.nic.in ஆகிய இணையதளங்களில் வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளது.