Weather Update : பிரியவிடை பெற்ற வடகிழக்கு பருவமழை…!! இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…!!
தென் இந்தியாவில் பொதுவாக, தென்கிழக்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் தான் அதிகமாக மழை பொழியும். அந்த காலங்களில் பெய்யும் மழையினால் தான் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, ஏரிகள் நிரம்பி அவ்வாண்டு முழுவதும் உபயோகிக்க தேவையான நீர் நமக்கு கிடைக்கிறது. மேலும், 2024 ஆம் ஆண்டிற்கான வடகிழக்கு பருவமழையானது கடந்த அக்டோபர் 15 ம் தேதி தொடங்கி, தற்போது வரை நிலவி வருகிறது.
இந்நிலையில், இந்த வடகிழக்கு பருவமழை தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இருந்து விலக தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், 2024, அக் 15-ல் தொடங்கிய வடகிழக்கு பருவமழையானது 100 நாட்களுக்கு மேல் நீடித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர், 2005-ல் வடகிழக்கு பருவமழை அதிகபட்சமாக 97 நாட்கள் வரை நீடித்தது குறிப்பிடத்தக்கது.
























