தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதோருக்கு சம்பளம் கட் – மாநகராட்சி பணியாளர்கள் கவனத்திற்கு!

0
தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதோருக்கு சம்பளம் கட் - மாநகராட்சி பணியாளர்கள் கவனத்திற்கு!
தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதோருக்கு சம்பளம் கட் - மாநகராட்சி பணியாளர்கள் கவனத்திற்கு!
தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதோருக்கு சம்பளம் கட் – மாநகராட்சி பணியாளர்கள் கவனத்திற்கு!

மகாராஷ்டிராவின் தானே முனிசிபல் கார்ப்பரேஷன் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது என்று கூறியுள்ளது. அனைத்து ஊழியர்களும் தடுப்பூசி சான்றிதழை அந்தந்த அலுவலகங்களில் கட்டாயம் சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி:

மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி புதிதாக 139 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், இருவர் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர். இதனால் மாவட்டத்தின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,66,687 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 11,545 ஆகவும் உயர்ந்துள்ளது. தானேயில் கோவிட்-19 இறப்பு விகிதம் 2.03% ஆக உள்ளது. அதன் அருகில் உள்ள பால்கர் மாவட்டத்தில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,38,185 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 3,289 ஆக உள்ளது.

மத்திய அரசு சார்பில் ரூ.2 லட்சம் வரை உதவித்தொகை – உயர்கல்வி மாணவர்கள் கவனத்திற்கு!

இந்நிலையில், தானே முனிசிபல் கார்ப்பரேஷன் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தனது ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு இன்றை வெளியிட்டுள்ளது. கோவிட் -19 ஒரு டோஸ் தடுப்பூசி கூட செலுத்தாத ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது. மேலும், நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் இரண்டாவது டோஸ் தடுப்பூசி மருந்தை செலுத்திக் கொள்ளாத ஊழியர்களுக்கும் சம்பளம் கிடைக்காது என்றும், அனைத்து ஊழியர்களும் தடுப்பூசி சான்றிதழை அந்தந்த அலுவலகங்களில் சமர்பிக்க வேண்டும் என்றும் நகராட்சி கட்டாய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சிவில் கமிஷனர் டாக்டர் விபின் சர்மா மற்றும் தானே மேயர் நரேஷ் மஸ்கே உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்ட தானே முனிசிபல் கார்ப்பரேஷன் கூட்டத்தில் நேற்று இந்த முடிவு எடுக்கப்பட்டது.

தமிழக விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு – நவம்பர் 15ம் தேதி வரை கால அவகாசம்!

இந்த மாத இறுதிக்குள் நகரில் 100% தடுப்பூசி இலக்கை அடைவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. நிர்வாகத்தின் இலக்கை அடைவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மேயர் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்காக முனிசிபல் கார்ப்பரேஷன் ‘ஆன்-வீல்’, ‘ஜம்போ’ போன்ற பல்வேறு தடுப்பூசி மையங்களை உருவாக்கியுள்ளது. மேலும், நகருக்குள் செல்லும் குப்பை சேகரிக்கும் வாகனங்கள் கோவிட் தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்த செய்தியை பரப்ப வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!